Home வரலாறு வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

Varaee Ahmed lebbai appa

வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

வரயீ அஹ்மது லெப்பை அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு

வலிமார்களில் பலரை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமியாம் காயல்பட்டணத்தில் மொகுதூம் தெருவுக்கு தனிச்சிறப்பு உண்டு அந்த தெருவில் பிறந்து வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற பல மஹான்களில் நமது அப்பா அவர்களும் ஒருவர்.

லெப்பப்பா என்றும், ஹாஜி அப்பா என்னும் அழைக்கப்படும் நம் மஹான் அவர்களின் பெயர் அஹ்மது என்பதாகும்

இளமையில் திருக்குர்ஆன் மனனம், இளமையிலேயே ஞானக்கல்வியில் தேர்ச்சி வலிமார்களுக்கே உரிய தனிப்பண்புகள் நிறைந்து காணப்பட்டார்கள் .

மஹான் தைக்கா ஸாஹிபு அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தாய் மாமன் ஆவார்கள்.

தைக்கா ஸாஹிபு அப்பா வரயீ அப்பா பற்றி கூறியது

எனது மாமா அவர்கள் மட்டும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஏனைய சஹாபாக்களின்
அந்தஸ்தில் அல்லாது அஷரத்துல் முபஷ்ஷர்ராஹ் என்னும் புவனத்திலேயே
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றபதின்மரில் ஒருவராக இருந்திருப்பார்கள் என கூறினார்கள்.

காயல்பட்டணம் புதுப்பள்ளியில் இமாமாகவும் தொழ வைப்பவர்களாகவும் ராத்திபு முன் நின்று நடத்துபவர்களாகவும் இருந்து, தர்வேஷ் என்று அழைக்கப்பட்ட அஹ்மது தம்பி லெப்பை அவர்களின் அன்பு மகள் சாரா ரழியல்லாஹு தஆலா அன்ஹா என்ற பெண்ணை மணந்து இரு பெண் மக்களைப் பெற்றார்கள். முஹம்மது செய்யிது மீரா ரழியல்லாஹு தஆலா அன்ஹா, ஜைனப் ரழியல்லாஹு தஆலா அன்ஹா என்பது அவ்விரு புதல்விகளின் அழகு
திருநாமங்களாம்.

சகல கலைகளிலும் தேர்ந்த ஞானம் மிக்க அப்பா அவர்களின் கராமாத்துகளோ கணக்கிலடங்காதவை, பன்முக கலைகளையும் குறையறக் கற்று மேதமையடைந்தார்கள்.

உணவு முறை

உயர் ஒழுக்கப் போதனைகளை போதிக்கும் அப்பா அவர்களின் உணவு முறை அறிந்து கொள்ள அவசியமானது. காய்கறிகளையே அதிகம் விரும்பி உண்ணும் அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ருசிகர செய்தி இது.

மருமகன் தைக்கா ஸாஹிபு அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களையும் அழைத்துக் கொண்டு
குலசேகரப்பட்டணத்தில் ஒருவரின் அழைப்பை ஏற்று விருந்துக்கு சென்றார்கள். விருந்துண்ண அமர்ந்தவர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் என்றார்கள். காரணம் கேட்ட போது உணவில் காய்கறிகள் இல்லையே காய்கறிகளை வையுங்கள் என்றார்கள்.

பிறிதொரு சமயம் தாம் காய்கறிகளை விரும்பி
உண்ணுவதற்கு காரணமான ஒரு ஹதீஸையும் கூறினார்கள்.

அந்த ஹதீஸ் இதுதான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். உங்கள் உணவுகளை காய்கறிகளைக் கொண்டு அழகு படுத்துங்கள். காய்கறிகள் நபிமார்களின் உணவாகும். இறைச்சிகள் செல்வந்தர்களின் உணவாகும்.

இந்த நபிவழியை சிரமேற்கொண்டு உணவு வழக்கத்தை அமைத்துக் கொண்டார்கள். இன்னும் பல சிறப்புக்களைக் கொண்ட அப்பா அவர்களின் மஜார்ஷரீப் ஸாஹிப் அப்பா தைக்காவிலேயே அமைந்துள்ளது.

அவர்களை அடக்கம் செய்த பொழுது உமர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மீதுள்ள மரியாதையின் காரணமாக தனது காலை மடக்கிக் கொண்டார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது

அவர்களது உருஸ் முபாரக் ஷவ்வால் பிறை 11

வருடாந்திரம் அவர்களுடைய கந்தூரி தினத்தில் அவர்களின் மௌலிது விமர்சையாக
ஓதப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…