விநாயகர் ஊர்வலத்திற்கு காயல்பட்டினம் இஸ்லாமியர்கள் அளித்த வரவேற்பு
காயல்பட்டினத்தில் மதநல்லிணக்கத்திற்கான மற்றுமொரு நிகழ்வு நடைபெற்றது
காயல் பட்டினம் கணபதீஸ்வரர் ஆலயம், உச்சினிமாகாளி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஊர்வலம் காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி நினைவு ஆர்ச் அருகே வந்தபோது ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரித்தனர்.
காயல்பட்டினத்தில் நடைபெறும் மகான்களின் கந்தூரிகளில் இந்து சமுதாய மக்கள் பரவலாக பங்கு பெறுவதும் அனைவர்களுக்கும் சமமாக அன்னதான வழங்கப்படுவதையும் காண முடியும்
குறிப்பாக தைகா சாகிப் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தைக்காவில் தினம்தோறும் சாதி மத பேதம் இன்றி அனைவரும் வந்து பலன் பெற்று செல்வதை என்றும் காணலாம்
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…