Home Uncategorized தொழுகையை முறிப்பவைகள்
Uncategorized - பொது - March 19, 2011

தொழுகையை முறிப்பவைகள்

தொழுகையில் இருமுதல், கனைத்தல், தும்முதல் போன்றவற்றிலிருந்து இரு எழுத்துகள் வாயிலிருந்து வெளிவந்தால் தொழுகை முறிந்து விடும்.
 

சதைப்பற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை விழுங்கினால் தொழுகை முறிந்து விடும்.

தொண்டையில் கபம் இறங்கிட அதைத் துப்பாமல் விழுங்கினாலும், வாயில் இரத்தம் வடிந்திருந்து அதைக் கழுவாத நிலையில் உமிழ் நீர் ஊறி அதை விழுங்கினாலும் தொழுகை முறிந்து விடும்.
 

தொழுது கொண்டிருக்கும் போது அதை முறித்துவிட நினைத்தால் உடனே தொழுகை முறிந்து விடும்.

தொழுகையிலுள்ள செயல்வடிவமான பர்ளுகளை இடம் மாற்றி செய்தாலும், சொல் வடிவ பர்ளுகளிலுள்ள தக்பீர் தஹ்ரீமா, ஸலாம் கொடுத்தல் ஆகிய இரண்டை மட்டும் இடம் மாற்றி செய்தால் அல்லது செயல்வடிவ பர்ளை அதிகப்படுத்தி செய்தாலும் தொழுகை முறிந்து விடும்.

பதினான்கு பர்ளுகளில் ஏதாவது ஒரு பர்ளை சுன்னத்தாக நினைத்தாலும் தொழுகை முறிந்து விடும்.

 தொழுகையின் செயல்முறை அல்லாத வேறு செயல்களை தொடர்படியாக மூன்று முறை செய்தாலும் தொழுகை முறிந்து விடும்.

கைவிரல்களுடன் முன் கையும் சேர்த்து மும்முறை அசைந்தால் அல்லது நாவை வாயின் வெளியே நீட்டி மும்முறை அசைத்தால் தொழுகை முறிந்து விடும்.

Check Also

கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு

கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் த…