Home Uncategorized ஜனாஸா தொழுகை
Uncategorized - பொது - March 21, 2011

ஜனாஸா தொழுகை

ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு.

1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள், சந்தூக் பெட்டி ஆகிய யாவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்க வேண்டும்.

ஃபர்ளுகள்:

1. ஃபர்ளான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை கிப்லாவை நோக்கி அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும்.
2. நின்று தொழ சக்தியுடையோர் நின்று தொழுவது ஃபர்ளாகும்.
3. தக்பீர் தஹ்ரீமாவை சேர்த்து நான்கு தக்பீர் சொல்லித் தொழுவது பர்ளாகும்.
ஒவ்வொரு தக்பீரையும் சொல்லும் போது கைகளை உயர்த்தி பின்பு அவைகளை நெஞ்சுக்குக் கீழே கட்டிக் கொள்வது சுன்னத்தாகும்.
4. முதல் தக்பீர் கட்டியவுடன் சூரத்துல் பர்திஹா ஓதுவது ஃபர்ளாகும். ஃபாதிஹாவிற்கு முன் அஊது கூறுவதும் இறுதியில் ஆமீன் கூறுவதும் சுன்னத்தாகும்.
5. இரண்டாவது தக்பீர் கட்டியவுடன் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வது ஃபர்ளாகும். அத்துடன் அவர்கள் குடும்பத்தார்களையும் ஸலவாத்தில் இணைத்து ஓதுவதும் ஸலவாத்திற்கு முன் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதும் எல்லா முஃமின்களுக்காகவும் துஆ செய்வதும் சுன்னத்துக்களாகும்.
6. மூன்றாவது தக்பீர் கட்டியவுடன் மய்யித்திற்காக துஆ செய்வது ஃபர்ளாகும். துஆவின் குறைந்த அளவு:

الّلهمّ اغفرله وارحمهُ
 

ஜனாஸா தொழுகைக்கு ஜமாஅத் சுன்னத்தாகும்.

மூன்றாவது தக்பீரில் ஓத வேண்டிய சுன்னத்தான துஆ:

اللهمّ اغفرله واعف عنه وعافه واكرم نزله ووسّع مدخله واغسلهُ بالماء والثّلج والبرد ونقّه من الخطايا كما يُنقّي الثوبُ الابيض من الدّنس وابدله دارا خيرا مّن داره واهلا
خيرا من اهله وزوجا خيرا من زوجه واد خله الجنّة وأعذه من عذاب القبر وفتنته ومن عذاب انّار
اللهمّ اغفر لحيّنا وميّتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأُنثانا
اللهمّ من احييته منّا فاحيه علي الاسلام ومن توفّيته منا فتوفه علي الايمان

மய்யித்து குழந்தையாக இருப்பின்:

اللهمّ اجعله فرطا لابويه وسلفا وذخرا وعظة واعتبارا لهما وشفيعا لهما وثقّل به موازنيهما وافوغ الصّبر علي قلوبهما

நான்காவது தக்பீரில்:

الّلهمّ لا بحرمنا اخره ولا بفتنّا بعده واغفر لنا وله

ஃகாயிப் ஜனாஸா:

வெளியூரில் இறந்த நபருக்காக (அந்த ஊர் குறைவான தூரத்தில் உள்ளது என்றாலும்) காயிப் ஜனாஸா தொழுது கொள்ளலாம். வௌ;வேறு ஊர்களில் இறந்த மய்யித்துகளுக்காக காயிப் ஜனாஸா தொழுவது சுன்னத் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…