Home செய்திகள் தர்ஹா பராமரிப்பு பேரவை
செய்திகள் - October 21, 2019

தர்ஹா பராமரிப்பு பேரவை

20/10/2019

இறைமறையின் இனிய வசனங்களோடு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கிய

இன்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களின் சாராம்சம்

மூன்றாவது முறையாக கூடியுள்ள தர்கா பராமரிப்பு பேரவையில் அதிக எண்ணிக்கையிலான ஜமாத் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்

கடந்த இரண்டு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது

வந்திருந்தவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியாக கடைசிவரை பயணிப்போம் சட்டங்களை மதித்து வாழ்வோம் என உணர்வுபூர்வமாக வாக்களித்தார்கள்

தர்ஹா பராமரிப்பு பேரவை மிகவும் நிதானமாக செயல்படும் என்றும் தாய்த்திரு நாடான இந்தியாவின் இறையாண்மைக்கும் தமிழக வக்ஃப் ஆணையத்தின் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு
சாத்வீக முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தீர்க்கமாக சொல்லப்பட்டது

பெண்கள் மத்தியிலும் தர்ஹா பராமரிப்பு பேரவையின் நோக்கங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் பெண்கள் தைகாகளிலும் பெண்களை கொண்டே பெண்களுக்கு கலந்துரையாடல் நடத்தி ஆலோசனைகளை பெறவேண்டும் என முடிவு செய்யப்பட்டது

நிதி நிர்வாகக் குழுவின் மூலமாக தேவைகள் முன்மொழியப்பட்டது அதன் விளைவாக வந்திருந்தவர்கள் கணிசமான தொகையை தாங்களாக முன்வந்து கொடுத்தது பாராட்ட தக்கதாக அமைந்தது

வந்திருந்தவர்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிய வைத்தனர் அவை புத்தகத்தில் பதியப்பட்டன

இணையதளம், சமூக ஊடகங்கள் மூலமாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது என விவாதிக்கப்பட்டது

நிகழ்வின் முத்தாய்ப்பாக தர்ஹா பராமரிப்பு பேரவையின் தற்காலிக அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது அதுசமயம் தக்பீர் முழக்கம் விண்ணைப் பிளந்தது

ஃபாத்திஹா துவா ஸலவாதுடன் 11:45 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது

அந்த கணமே செயல் வீரமிக்க நமது தர்கா பராமரிப்பு பேரவையின் குழுவினர் அலுவலகத்தில் பணிகளை தொடர்ந்தனர்

அல்ஹம்துலில்லாஹ்

தர்ஹா பராமரிப்பு பேரவை ஊடகக் குழு ,
காயல்பட்டணம்.


Check Also

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…