நூஹ் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு.
மஞ்சக் கொல்லையில் அடங்கப்பட்டிருக்கும் செய்கு அப்துல் காதிர் லெப்பை என்ற அக்காது லெப்பை அவர்களின் மகனாக காயல்பட்டணத்தில் நூஹ் லெப்பை ஆலிம் வலி அவர்கள் பிறந்தார்கள். பதிமூன்று வயதில் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் சென்று முஹ்யித்தீன் அரபி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் புசூஸுல் ஹிகம் என்ற நூலை எடுத்தச் சென்று ஓதிக் கேட்டார்கள். அதற்கு அப்பா அவர்கள், ஆன்மீக ஆழிய கருத்துக் கொண்ட நூலாதலால், சிறு பிள்ளைக்கு ஓதிக் கொடுக்க இயலாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். பின், பரங்கிப்பேட்டை சென்று மஹ்மூது தீபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஓதிக் கேட்க, அவர்களும் அப்பா அவர்கள் சொன்ன பதிலையே சொல்லி அனுப்பிவிட்டார்கள். அக்காது லெப்பை அவர்கள் கனவில் தோன்றி சொன்ன பிறகு, அதை நூஹ் வலி அவர்களுக்கு மஹ்மூது தீபி அவர்கள் ஓதிக் கொடுத்தார்கள்.
தமிழைக் கற்க ஆர்வம் ஏற்பட காஸிம் புலவருடன் சேர்ந்து திருவடிக்கவிராயர் என்ற தமிழறிஞரை அணுகி தமழ் கற்றனர். பொன்னானி சென்று செய்கு மொகுதூம் அவர்கள் நடத்தி வந்த கல்விக் கூடத்தில் சில காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்கள். பின்னர் அப் பதவியைத் துறந்து நாடு, காடுகளில் சுற்றித் திரிந்தார்கள்.
தமது இறுதி காலத்தை கேரள மாநிலம் பூவாற்றில் கழித்த அவர்கள் ஆன்மீக கருத்துக்கள் அடங்கிய வேதபுராணம் என்ற அற்புத நூலை இயற்றினர். இறுதியில் ஹிஜ்ரி 1156 ம் ஆண்டு ரபீயுல் அவ்வல் பிறை 10 புதன் கிழமை மறைந்து அங்கேயே அடங்கப்பட்டார்கள். அவர்களின் மறைவு செய்தியை தங்கள் உள்ளுணர்வு மூலம் தெரிந்த காஸிம் புலவர் வலி நாயகம் அவர்கள் காயல்மாநகரில் அதை அறிவித்தார்கள்.
பூவாற்றில் மகான் அவர்களின் அடக்கவிடத்தின் மீது அவர்களது நண்பர் குஞ்சுமூசுப் பிள்ளை மணிமண்டபம் கட்டினார். அவர்களின் நினைவுநாள் விழா ரபியுல் அவ்வல் பிறை 24ல் ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
இவர்களின் மகனார் செய்யிது அஹ்மது அவர்களும் விலாயத் பெற்றவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள்தான் குருவித்துறைப் பள்ளியை நிர்மாணித்தவர்கள்.
அவர்களின் மறைவு ஹிஜ்ரி 1261 ம் ஆண்டு ஸஃபர் பிறை 22 திங்களிரவு மறைந்தார்கள். அவர்களின் அடக்கவிடம் குருவித்துறைப் பள்ளியில் உள்ளது.

நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…