Home Uncategorized ஸுஜூதுகள்
Uncategorized - பொது - March 26, 2011

ஸுஜூதுகள்

ஸஜ்தா ஸஹ்வு

மறந்ததற்காக ஸுஜூது செய்தல்' என்பது இதன் பொருள் ஆகும். தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்த பின்பு ஸலாம் கொடுப்பதற்கு முன்பாக இரண்டு ஸஜ்தா செய்வதை இது குறிக்கிறது.

இவ்விரண்டு ஸுஜூதுகளும் ஃபர்ளுகளை விட மேலதிகமான செயல்களாக இருப்பதால் இவற்றைச் செய்யத் தொடங்கும்போது 'மறதிக்காக ஸுஜூது செய்கிறேன்' என்றுநிய்யத் செய்வது ஃபர்ளாகும். இதில்,

سبحان من لاّينام ولايسهو
 

என்று தஸ்பீஹ் ஓதுவது சிறப்பானது என்று சொல்லப்படுகிறது.கீழ்வரும் காரணங்களில் ஒன்றுக்காக ஸஜ்தா ஸஹ்வு செய்வது சுன்னத் ஆகும்.
 

1. அப்ஆழ் ஸுன்னத்துகளில் ஏதாவதொன்றை விட்டுவிடுதல்
2. அல்லது விட்டுவிட்டதாக சந்தேகித்தல்.
3. வேண்டுமென்றே செய்தால் தொழுகையை முறித்து விடும். மறந்து செய்தால் தொழுகையை முறிக்காது என்ற நிலையிலுள்ள செயலைத் தொழுகையில'; மறந்து செய்தல்.
4. தொழுகையில் ஓத வேண்டியவைகளை அதற்குரிய இடம்விட்டு வேறிடத்தில் ஓதுதல்.
5. தொழுகையில் ஒரு ரக்அத்தையோ, ஃபர்ளையோ செய்யாமல் விட்டு விட்டதாகச் சந்தேகித்து மீண்டும் செய்தல்.

அப்ஆழ் சுன்னத்:

1. முதலாவது அத்தஹிய்யாத் ஓதுதல்.
2. அதற்காக அமர்தல்.

3. அதன் இறுதியில் அண்'ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுதல்.

4. ஸுப்ஹுடைய ஃபர்ளுத் தொழுகையிலும், ரமலான் மாத இறுதி 15 நாட்களில் வித்ரின் கடைசி ரக்அத்தில் குனூ|த் ஓதுதல்.

5. குனூத்திற்காக நிற்றல்.

6. குனூத்தின் இறுதியில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அiலி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுதல்.

7. குனூத்தினுடைய ஸலவாத்தின் இறுதியிலும் பிந்திய அத்தஹிய்யாத்தினுடைய ஸலவாத்தின் இறுதியிலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்களையும் சேர்த்து  ஸலவாத் ஓதுதல்.

ஸுஜூதுத் திலாவத்
 

ஸஜ்தாவின் ஆயத்தை ஓதியதற்காக  ஸுஜூது செய்தல் என்பதன் இதன் பொருளாகும். ஸூரத்துல் ஹஜ்ஜில் இரண்டு ஸஜ்தாக்கள், நஜ்ம் அஃராஃப், ரஃது, நஹ்லு, மர்யம், புர்கான், நம்லு, அலிப் லாம் மீம் ஸஜ்தா, ஹாமீம் ஸஜ்தா, அல் இஸ்ரா, இன்ஷிகாக், அலக் ஆகிய ஸூராக்களில் ஒவ்வொரு ஸஜ்தாக்கள் ஆக மொத்தம் பதினான்கு ஸுஜூதுகள் உண்டு.
 

குர்ஆன் ஷரீபை ஓதிக் கொண்டிருப்பவர்கள் இந்த சுன்னத்தான ஸுஜூதை நிறைவேற்றுவதற்கு தொழுகையின் எல்லா ஷர்த்ததுக்களையும் பேணிக் கொள்ள வேண்டும். அத்துடன் திலாவத்துடைய ஸுஜூது செய்வதாக நிய்யத் செய்து தக்பீர் தஹ்ரிமா கட்ட வேண்டும். பின்பு ஒரே ஒரு ஸுஜூது செய்து சலாம் சொல்ல வேண்டும்.
 

سجد وجهي للذي خلقه وصوّره وشقّ سمعه وبصره بحوله وقوّته فتبارك الله احسن الخالقين.
اللّهم اكتب لي بها عندك اجرا واجعلها لي عندك ذخرا وضع عنّي بها وزرا واقبلها منّي كما قبلتها من
  عبدك داؤد
என
சுஜூதில் ஓதுவது சுன்னத்தாகும்.

ஸஜ்தா ஆயத்தை ஓதியதற்காக ஸுஜூது செய்வது சுன்னத்தாகும். ஆனால் இமாம் இதை ஓதியதற்காக ஸுஜூது செய்யும்போது மஃமூம் ஸஜ்தா செய்வது ஃபர்ளாகும்.

ஸஜ்தா ஷுக்ரு:
 

நமக்கு ஏதாவதொரு நன்மை கிடைக்கப் பெற்றாலோ, அபாயங்கள், ஆபத்துக்களிலிருந்து பாதுகாவல் கிடைக்கப் பெற்றாலோ ஷுக்ராக ஸுஜூது செய்வது சுன்னத்தாகும். இதற்கு தொழுகையின் எல்லாவிதமான ஷர்த்துக்களையும் பேணிக் கொள்ள வேண்டும்.அத்துடன் ஷுக்ருடைய ஸஜ்தா செய்வதாக நிய்யத் செய்து தக்பீர் கட்டிக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரே ஒரு ஸஜ்தா செய்ய வேண்டும்.

ஆனால் தொழுகையை நிறைவு செய்தபின் மேற்சொன்ன காரணங்கள் எதுவுமின்றி ஸுஜூது மட்டும் செய்வது ஹராமாகும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…