Home பொது நீங்களும் சாதிக்கலாம்!
பொது - September 30, 2010

நீங்களும் சாதிக்கலாம்!

அன்புள்ள மாணவ மணிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கல்வி

    ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே தனித் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கிறான். இருந்தபோதிலும் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. ஏனென்றால் சரியான அறிவை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

இக்கால கல்வியானது அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. சில மாணவர்கள் சொல்கிறார்கள் எனக்கு சில பாடங்கள் கடினமாக இருக்கிறது என்று. ஆனால் உண்மையில் அதே பாடத்தில் பல மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று சாதனை படைக்கின்றனர்;. பாடங்களில் மாணவர்கள் செலுத்தும் கவனமும், படிக்கும் முறையுமே வெற்றிக்கு காரணமாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக் கொண்டால் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடப்புத்தகங்கள், தேர்வு முறை, தேர்வு வினாத் தாள், மதிப்பீடு முறைதான் உள்ளது. அதுபோல் நேரமும் அனைவருக்கும் சரிசமமாகவே உள்ளது. அதனால் அவன் நல்ல மதிப்பெண் பெறுவது என்பது  அவனுடைய கையில்தான் இருக்கிறது.

ஒன்றைப் பெற வேண்டுமென்றால் ஒன்றை தியாகம் செய்தாகவே வேண்டும். உதாரணமாக நல்ல பொருள் ஒன்று நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் பணம்; செலவழித்தாக வேண்டும். அதே போல் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமென்றால், வீண் விளையாட்டுக்கள், பொழுது போக்குகள் போன்றவற்றை தியாகம் செய்து படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து கிடைக்கக் கூடிய வெற்றி தியாகம் செய்த செயல்களை விட மதிப்புமிக்கதாக இருக்கும். கல்வி என்பது களவெடுக்க முடியாத ஒன்று. அதை பலரிடம் பகிரும்போது அதிகமாகிறது. பொறாமை என்றில்லாமல் பிறருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் நமது கல்வியும் வளர்ச்சி அடைகிறது.

படிக்கின்ற கல்வி பயன் தரக் கூடியதாக இருக்க வேண்டும். எல்லோரும் படிக்கிறார்கள், அதனால் நானும் படிக்கிறேன் என்று படிப்பது கூடாது. அதேபோல் பணத்திற்காகவும், வேலைக்காகவும், பட்டத்திற்காகவும் மட்டும் படிக்கக் கூடாது. கல்வியில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. அதில் இது முக்கியமானது, இது முக்கியமில்லை என்று சொல்ல முடியாது. எல்லா துறைகளுமே மனித வாழ்க்கைக்குத் தேவையானதுதான். ஒவ்வொன்றும் ஒருவகையில் மனிதனுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

முறையாக படித்தல்:

படிப்பதை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். நாமாகவே ஒன்றிற்கு அர்த்தம் கற்பித்து படிக்கக் கூடாது. தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்டு படிக்க வேண்டும். கேட்பதில் வெட்கப்படக் கூடாது. வெட்கப்பட்டவன் கற்க இயலாது. தன்னிடமுள்ள தவறுகளை ஒப்புக் கொண்டு அதை  திருத்தி படிக்க வேண்டும். தான் செய்வதுதான் சரி என்று நிற்க கூடாது. நமக்கு மூத்தவர்கள், ஆசிரியர்கள்,  சொல்வதைக் கேட்டு படித்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது இலகுவாக இருக்கும். மாணவர்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கண்ணியமும், மரியாதையும் கொடுக்க வேண்டும். எவனுக்கு ஒழுக்கம் இல்லையோ அவனுக்கு கல்வி பிரயோஜனம் தராது.

வெற்றி பெறுவதற்கு கடின முயற்சி தேவை. கடின முயற்சிக்கு மாற்று எதுவும் கிடையாது. படித்ததை நடைமுறைப் படுத்திப் பார்ப்பது ஒரு மனிதனின் படிப்பை முழுமையாக மாற்றும். சோம்பேறித்தனமாக இருப்பது மிகவும் கெட்ட குணமாகும். இச்செயல் உங்களுக்கு தேவையில்லாத தீய விளைவுகளை உருவாக்கும்.

எந்த ஒரு நபரும் எல்லாவற்றையும் தெரிந்தவராகவோ, ஒன்றுமே தெரியாதவராகவே இருக்க மாட்டார். தன்னைவிட அதிக மதிப்பெண் பெறும் மாணவரோடு மட்டும் ஒப்பீடு செய்யக் கூடாது. நூறு சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடின முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நோய்நொடி வந்தால் அதற்குரிய மருந்துகள் சாப்பிட்டு அதற்குரிய ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் நோய் சீக்கிரமாக குணமாகும்.  எவ்வாறிருந்தாலும் படிப்பேன் என்று அடம்பிடித்தால்; உனது உடல் நலமும், படிப்பும் கெட்டு விடும்.

நேரப் பயன்பாடு:

மாணவர்கள் படிக்கும் ஒவ்வொரு பாடத்திட்டமும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்கும் மாதிரிதான் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நேரத்தை முறையாக, முழுமையாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். சில மாணவர்கள் மேல்நிலைத் தேர்வுகளுக்கு கடைசி நேரத்தில் ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வாரத்திலோ படித்து தங்களை தயார் பண்ணிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி ஒரு மாதத்தில் படிப்பது சாத்தியம் என்றால், கல்வியாளர்கள் அதற்கென்று ஒரு வருடத்தை நிர்ணயித்திருக்க மாட்டார்கள். எனவே மேலதிக நம்பிக்கை என்பது புற்றுநோய்க்கு சமமானது. கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கிடைத்த நேரங்களை வீணாக்கிவிட்டால் இறுதியில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும்.

மாணவர்கள் படிப்பதற்கு தமக்கு உகந்த நேரத்தை காலை, மாலை, இரவு இதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். படிக்கும் பாடங்கள் மனதில் பதிய மிக உகந்த நேரம் விடியற்காலைதான் என்பது அறிஞர்களின் கருத்து. அதிகாலை 4 மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து, தொழுது இறைவனிடம் பிரார்த்தித்து, சிறிது உணவு சாப்பிட்டு விட்டு படிக்க ஆரம்பிக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரங்களில் பல மணி நேரம் படிப்பதை விட சிறந்தது.

ஒவ்வொரு பாடத்தையும் குறைந்தது முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தொடர்ந்து படிக்க வேண்டும். அடுத்த பாடத்தை படிக்கத் துவங்குமுன் பத்து நிமிடங்களாவது இடைவெளி விட்டுக் கொள்ள வேண்டும். பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் படிப்புக்கு ஒதுக்கும் நேரத்தை மிகக் கவனமாக அமைக்க வேண்டும். 60மூ நேரத்தை வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், கணக்குப் பதிவியியல், பொருளியியல், கணிணியியல், வரலாறு போன்ற பாடங்களுக்கும், மீதி 40மூ நேரத்தை ஆங்கிலம், தமிழ், அரபி போன்ற மொழிப் பாடங்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு என்று அதிக நேரம் ஒதுக்க வேண்டாம். ஏனெனில் எல்லாப் பாடங்களும்;; மேற்படிப்பிற்கு அடிப்படையாக அமைகின்றது. உதாரணமாக கணிதத்திற்கு அதிக நேரம் ஒதுக்கிவிட்டு மற்ற பாடங்களில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக் கூடாது.

படிக்கும் கலை:

மனதை ஓர்முகப்படுத்திப் படிப்பது மிகவும் அவசியம். படிக்கும் இடம் முறையான காற்றோட்டம், சரியான அளவு வெளிச்சம், அமைதியாகவும் இருக்கும் படி பார்துக் கொள்ள வேண்டும். கவனத்தை சிதறடிக்கும் தொலைக் காட்சி, விளையாட்டுகள், பாடல்கள், அதிகப் பேச்சுக்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் படிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே செல்லக் கூடாது. அவ்வாறு செய்தால் பாடச் சுமை கூடிவிடும். அதனால் அன்றைய பாடத்தை அன்றே படிக்க வேண்டும்.

படிக்கும் கலையில் வாசித்தல் மற்றும் எழுதுதல் முக்கியமாக உள்ளது. முதலில் படிக்கும்போது முன்னுரையிலிருந்து முடிவுரை வரையும் அனைத்தையும் வாசிக்க வேண்டும். அப்போது அந்தப் பாடம் எதைப் பற்றி சொல்கிறது என்ற பொதுவான ஐடியா கிடைக்கும். வாசிக்கும் போது எல்லாமே புரிந்து விடும் என்பதற்கில்லை. பாடத்தில் எந்தப்; பகுதிகளில் என்ன முக்கிய கருத்துக்கள் இருக்கிறது என்பதும், பாடப்புத்தகத்தில் பின்பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில் எங்கிருக்கிறது என்பதும் இதன் மூலம் தெரியும்.

இரண்டாவது தடவை அந்தப் பாடங்களை வாசிக்கும் போது முக்கிய குறிப்புகளை கிரகிக்க வேண்டும். முதன் முறை வாசிக்கப்பட்;ட போது கிடைத்த பொதுவான ஐடியாவோடு தற்போது கிடைத்திருக்கும் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தற்போது இந்தப்பாடப் பகுதி நமக்கு ஓரளவுக்கு தெரிந்ததாக அமைந்து விடும். சில தெரியாத பகுதிகள் இருப்பினும் ஆசிரியர் பாடத்தை நடத்தும்போது ஒவ்வொரு பகுதியும் முழுமையாக தெரிந்து விடும். பாடத்தை படிக்கும்போதே முக்கிய குறிப்புகளையும், வார்த்தைகளையும் பென்சிலால் குறித்துக்கொள்ள வேண்டும். மேலதிக குறிப்புகளை ஆசிரியர் நடத்தும்போது புத்தகத்தின் ஓரத்தில் பென்சிலால் குறித்துக்கொள்ள வேண்டும்.

இதன் பிறகும் பாடம் புரியவில்லையென்றால்,

1. அந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்க்க வேண்டும். ஆனால் அதைத் தொடர்ந்து வாசிக்காமல், சிறிது நேரம் கழித்து வாசிக்க வேண்டும்.

2. தெரிந்த மாணவர்களிடமோ அல்லது தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடமோ அதற்குரிய விளக்கத்தை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே பாடத்தை தொடர்ந்து படித்தால் உனக்கு சடைவு ஏற்படும். எனவே பாடங்களை மாற்றி மாற்றி படிக்க வேண்டும். மேலும் உற்சாகமாக இருக்கும்போது புரியாத பாடங்களையும், சற்று சோர்வாக இருக்கும்போது படித்த பாடங்களையும் திரும்ப படிக்க வேண்டும்.

சுயமாக படிப்பிற்கு தயாராகுதல்:

பள்ளியில் தேர்வு வரும்வரை நீ காத்திருக்காமல் தமக்;குத் தாமே தேர்வுகள் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மூத்த மாணவர்களின் கேள்வித்தாள்களை வாங்கி அதில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் எழுதி பழகிக் கொள்ள வேண்டும். பொதுத் தேர்வில் பழைய மாணவர்களின் திருத்தப்பட்ட விடைத்தாள்களின் பிரதிகள் தற்போது கிடைக்கிறது. அதை வாங்கி வைத்து அதில் அளிக்கப்பட்டுள்ள விடைகளோடு ஒத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வுத்தாளை திருத்த செல்லும் ஆசிரியர்களிடம் அந்தந்த பாடங்களுக்குரிய விடைகளின் முக்கிய குறிப்புகள்(முநல pழiவெள) கொடுக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில்தான் அவர்கள் தாள்களை திருத்துவார்கள். அதை அந்த ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
 
மாணவர்கள் தங்களுடைய திறமைகள், பலஹீனங்களை (ளுறுழுவு-ளுவசநபெவாஇ றுநயமநௌளஇ ழுppழசவரnவைலஇ வுhசநயவ) தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும். தன்னிடம் ஏற்படும் குறைகளை தனது திறமையால் வெல்ல வேண்டும்.

ஞாபக சக்தி

ஒவ்வொரு மனிதனுக்குமே ஞாபக சக்தி என்பது போதுமான அளவு இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரும் அச் சக்தியை சரியான முறையில் பயன்படுத்துவதில்தான்; மற்றவர்களுடன் வேறுபடுகிறார்கள். நமது வாழ்க்கையில் எப்போதோ நடந்த சம்பவங்கள் ஞாபகம் வரும்போது முன்பு படித்த பாடங்கள் ஞாபகம் இல்லை என்று சொல்வது சரியில்லை. அது ஞாபகசக்தியை பயன்படுத்தியதில் ஏற்படும் குறைபாடேதான் அன்றி வேறில்லை. நம் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் சிதறடிப்பதே ஞாபக மறதிக்கு காரணமாகும்.  

படித்தப் பாடங்களை ஞாபகமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்:

1. தினசரி நடவடிக்கைகளை குறிப்பு எடுத்து அதற்கு நேர அட்டவணையை தயார் படுத்திக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

2. கவனத்தை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும்.

3. பாடத்தை திரும்ப திரும்ப வாசிக்க வேண்டும். படித்த பாடத்தை திரும்ப திரும்ப நினைவு படுத்தி பார்க்க வேண்டும்.

4. படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும்.

5. சூத்திரங்கள் (குழசஅரடயள), வரைவிலக்கணங்கள் (னுநகinவைழைளெ) போன்ற முக்கிய குறிப்புகளை தனியாக ஒரு நோட்டில் எழுதி அதை அடிக்கடி பார்த்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

6. ஒரு பாடத்தின் மொத்த சாராம்சத்தையும் மன வரைபடம் (ஆiனெ ஆயி) மூலம் வரைந்து வைக்க வேண்டும்.

7. நன்கு படித்தவர்களோடு பாடங்களைப் பற்றி கலந்துரையாடல் செய்ய வேண்டும். தெரியாதவர்களுக்கு படித்ததை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. படிக்கும் போது தேவையில்லாததை பார்ப்பது, பேசுவது, கேட்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தேர்வுக்கு தயாராகுதல்:

தேர்வு எழுத செல்லும் போது தேவையில்லா பயத்துடன் செல்லாமல் இருப்பதும், தைரியத்துடன் செல்வதும் நம்முடைய தேர்வை (வாழ்வை) மிக எளிமையானதாக மாற்றும். தேர்வுக்கு முதல் நாள் இரவு நன்றாகத் தூங்க வேண்டும். அதிகாலையில் எழுந்து படித்த பாடங்களை திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சூத்திரங்களை மனதில் எப்பொழுதும் நிலைநிறுத்த அட்டையில் எழுதி படிப்பறையில் தொங்கவிட வேண்டும். சில சூத்திரங்கள் ஒரே மாதிரியாக ஆனால் சில சின்ன மாற்றங்களை கொண்டிருக்கும். இவ்வாறு அட்டையில் தொங்கவிடும் பொழுது நாம் அச்சூத்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்து எளிமையாக படித்து விடலாம்.

முந்தைய வருட தேர்வு கேள்வித்தாள்களை திருப்பிப் பார்க்கும்போது நமக்கு எவ்வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது என்ற ஐடியா நமக்கு கிடைக்கும். ஆனால் எந்த பாடத்திலிருந்து எப்பகுதியிலிருந்து கேள்வி கேட்கப்படுகின்றது என்பதை பார்க்கக் கூடாது.

நாம் கைடுகளை மட்டுமே நம்பி படிக்கக் கூடாது. நிறைய கேள்விகள் கைடுகளிலிருந்து மட்டும் வராது. நாம் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால், பாடப்புத்தகத்தை வரிவரியாக, பக்கம்பக்கமாக, வார்த்தை வார்த்தையாக நாம் புரிந்து படிக்க வேண்டும். முழுவதையும்; மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் சூத்திரங்கள்(குழசஅரடயள), வரைவிலக்கணங்கள்(னுநகinவைழைளெ), விதிகள்(சுரடநள) போன்றவற்றை அப்படியே மனப்பாடம் செய்வது மிக அவசியம்.

தேர்வு அட்டவணை கிடைத்து நாம் படிப்பதற்கு கால அட்டவணை போடும் போது கடைசித் தேர்வை முதலில் படிக்கும்படி அமைக்க வேண்டும். அப்பொழுதான் முதல் தேர்வுக்குரிய பாடத்தை தேர்வுக்கு முன்னால் படிக்கலாம். முக்கிய குறிப்புகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து திருப்புதல் செய்வது நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.

தேர்வு எழுத செல்லும் போது சில விஷயங்கள் நமக்கு மறந்தது போன்ற சிந்தனை ஏற்படும். ஆனால் உண்மையில் மறக்காது. கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பார்த்தால் நாம் படித்தது ஞாபகத்திற்கு வந்து விடும். ஆகவே பரீட்சைக்கு செல்லும் போது தேவையற்ற பயத்தையும், பதட்டத்தையும் நாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.

தேர்வுக்கு அரை மணிநேரத்திற்கு முன்பாக செல்ல வேண்டும். ஹால் டிக்கட் (ர்யடட வுiஉமநவ) மற்றும் தேவையான பொருட்களை சரிபார்த்து எடுத்துச் செல்ல வேண்டும். பேனா மற்றும் பென்சில்களில் இரண்டு வைத்துக் கொள்ள வேண்டும். புதியப் பொருட்களை (பேனா, பென்சில்) தேர்வு அன்று எடுத்து சென்று எழுதுவது நம்முடைய எழுதும் நேரத்தை அதிகப்படுத்தும். ஆகவே வழமையான எழுதிப் பழகிய பொருட்களை கொண்டு சென்று தேர்வில் எழுதுவது நேரத்தை மிச்சப்படுத்தும்.

தேர்வு எழுதுதல்

தேர்வுக் கேள்வித்;தாளில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை (ஐளெவசரஉவழைளெ) மிகக் கவனமாக வாசித்து அதன்படி எழுத வேண்டும். கேள்வியை அரைகுறையாக வாசிக்காமல் முழுமையாக வாசித்து பதிலளிக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு பரீட்சை எழுத வேண்டும். தேர்வில் முக்கியமான கருத்துக்களை மட்டும் எழுத வேண்டும். தேவையில்லாத கதைகளை எழுதக் கூடாது. நம்முடைய நடைமுறை மொழியில் கேள்விக்கான பதிலை எழுதலாம். ஆனால் விதிகள், தேற்றங்களை எவ்வித மாற்றங்களும் இல்லாமல் எழுத வேண்டும்.

உரிய கேள்வி எண்ணை சரியாக எழுதிய பின்னரே அந்த கேள்விக்குரிய பதில்களை எழுதத் தொடங்க வேண்டும். தேர்வு எழுதும்போது வேறு சிந்தனைக்கு இடமளிக்கக் கூடாது. தெளிவாகவும், அழகாகவும் எழுத வேண்டும். தேர்வுத் தாளில் தேவையான இடமிடுதல், பக்கக் கோடு போடுதல், வார்த்தைக்கு வார்த்தை இடமிடுதல் ஆகியவை அவசியம். மற்றும் முக்கியமான குறிப்புகளை தேர்வுத் தாளில் அடிக்கோடிட வேண்டும். எல்லா வரிகளையும் அடிக்கோடிடுதலை தவிர்க்க வேண்டும். சிவப்பு, பச்சை பேனாக்களை ஒரு காலமும் நமது தேர்வுத் தாளில் பயன்படுத்தக் கூடாது. படத்தை மிகவும் தெளிவாக வரைந்து அதற்குரிய பாகங்களை சரியாக குறிக்க வேண்டும்.

சரியான நேரப் பயன்பாடு எல்லா கேள்விக்கும்; பதிலளிக்க உதவி செய்யும்.
ஒவ்வொரு வினாவிற்கும் தேவையான நேரத்தை ஒதுக்கி அந்நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும். 10 மதிப்பெண் கேள்விக்கு அதற்குரிய நேரத்தில் முடிக்க வேண்டும். 10 மதிப்பெண் கேள்விக்கு பல பக்கங்கள் மற்றும் பல மணிநேரம் எழுதுவதாலோ 10 மதிப்பெண்ணுக்கு பதிலாக 11 மதிப்பெண் கிடைக்கப் போவதில்லை. கொடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் பதிலை சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுத வேண்டும்.

வரிசைக் கிரமமாக கேள்விக்கு பதிலளிப்பது மிகச் சிறந்தது. அனைவரும் அதிகம் பயன்படுத்தக் கூடிய வரிசைக் கிரமம்: ஒரு மதிப்பெண் வினா, மூன்று மதிப்பெண் வினா, பெரிய கேள்விகள். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கும் போது இடையில் ஒரு கேள்விக்கு விடை தெரியவில்லையெனில் அதற்கு இடைவெளி விட்டுவிட வேண்டும். விடை ஞாபகம் வந்தவுடன் எழுதிக்கொள்ளலாம். விடையை வரிசைக் கிரமமாக எழுதாமல் இருப்பது தேர்வு மதிப்பீடு செய்பவரை எரிச்சலடையச் செய்யலாம். வரிசைக் கிரமமாக எழுதுவது பெரிய கேள்விகளுக்கு பொருந்தாது. பெரிய கேள்வியில் நன்கு தெரிந்ததை முதலில் எழுதிக் கொள்ளலாம்.

ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது அந்த பதிலில் மாணவர்கள் முக்கியமான கருத்தை (முநல றழசனள) கண்டிப்பாக எழுத வேண்டும். ஏனென்றால் முக்கியமான கருத்தின் (முநல றழசனள)  அடிப்படையிலேயே மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.  பாடப்புத்தகத்தில் வரைபடம் உள்ள  கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டால் வரைபடம் கண்டிப்பாக வரைய வேண்டும். வரைபடத்தில் பாகங்களை குறித்து, அதற்கு ஸ்கெட்ச் கொடுக்க வேண்டும். சில தவறுகள் நம்முடைய கவனமின்மையால் ஏற்படலாம். இதனை நாம் தேர்வில் விடைத் தாளை கொடுப்பதற்கு முன்னால் நன்கு திருப்புதல் செய்த பிறகு ஒப்படைக்க வேண்டும். இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்குரிய ஆலோசனைகள்:

அதிக மதிப்பெண் பெறுவதற்கு பதிலளிக்கும் விதம் மற்றும் கேள்விகளில் நல்ல கேள்வியை தேர்ந்தெடுப்பது  மிக முக்கியம். இதில் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும். 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களும் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களும் இந்த விஷயத்தில்தான் வேறுபடுகிறார்கள்.

இரண்டு கேள்விகள் கொடுக்கப்பட்டு ஏதாவதொன்றை தேர்ந்தெடுத்து எழுதவும் என்று கேட்கப்படும் வினாவில் டெரிவேசன் (னுநசiஎயவழைn) மற்றும் தியரி (வுhநழசல) கேள்வி கேட்கப்பட்டால் டெரிவேசன் (தவறில்லாமல்) எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும். தியரி பதிலில் ஒரு வேளை முழு மதிப்பெண் கிடைக்காமல் போகலாம். அதே சமயம் டெரிவேசனில் தவறு விட்டால் தியரியை விட அதில் அதிக மதிப்பெண் இழப்பீடு ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் தியரியை தேர்ந்தெடுக்கலாம்.

வகுப்புத் தேர்வுகளில் திருத்தி தரப்படும் விடைத்தாள்களை நமது பாடப்புத்தகத்துடன் ஒப்பிட்டு எதில் தவறு ஏற்பட்டது என்பதை கவனித்து திருத்திக் கொள்ள வேண்டும். வகுப்புகளில் நடைபெறும் தேர்வுகள் சிறிய சிறிய பகுதிகளாக நடத்தப்படுகிறது. எனவே  இதில்; எளிதில் முழு மதிப்பெண் பெறலாம். இது நம்முடைய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். பொதுத் தேர்வு எழுதுவதற்கு தைரியத்தைக் கொடுக்கும்.

சில மாணவர்களுக்கு பாடங்கள் நன்கு தெரிந்தும் குறைவான மதிப்பெண் பெறுவார்கள். இதற்கு காரணம் மதிப்பீடு செய்பவர் எதிர்பார்ப்பது போன்று மாணவனுடைய பங்களிப்பு இருக்காது. 100 சதவீத மதிப்பெண் எடுக்கும் மாணவர்களைப் போல் குறைவாக மார்க் எடுக்கும் மாணவர்களின் விடைத்தாள்கள் பிரதிபலிப்பதில்லை.எதை எழுத வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்ளவில்லையென்றால் தவறுகள் ஏற்படும்.

அந்தந்த தேர்வுகள் முடிவு பெற்றவுடன் அந்தத் தேர்வை பற்றி நாம் சிந்திக்கக் கூடாது. இவ்வகையான சிந்தனை நம்முடைய அடுத்த தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவு பழக்கங்கள்:

முறையான உணவுப் பழக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். நேரம் தவறி உண்ணப்படும் உணவுகள் குடற்புண் ஏற்பட வழிவகுக்கும். இது மற்ற நோய்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது. காய்கறி, முட்டை, மீன், இறைச்சி, பால், கீரை, பருப்பு வகைகள் போhன்ற சத்துள்ள உணவுகளை தேவையான அளவு சாப்பிட வேண்டும். தேவைக்கதிகமாக சாப்பிடுவது கூடாது. அஜீரணக் கோளாறு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.  சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிட வேண்டும். தேர்வு நேரங்களில் கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது தூக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தேர்வு நேரங்களில் புதிய வகை உணவுகளை உண்ணுவதால் உடல் நலத்திற்கு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே புதிய வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். குளிர் பானங்கள் நீ பழக்கப்பட்டிருந்தால் அருந்தலாம். இல்லையெனில் அது தொண்டை புண் போன்ற நோய்களை ஏற்படுத்தி உனது உடல்நிலையை பாதிப்படையச் செய்யும். ஆகவே பொதுவாக சுடுநீர் அருந்துவதே சிறந்தது. முக்கியமாக சாப்பிட்ட உடனே தூங்கக் கூடாது.

விளையாட்டு – உடற்பயிற்சி:

'படிக்கும் நேரத்தில் படி. விளையாடும் நேரத்தில் விளையாடு.'

எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதும் எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பதும் பிரயோஜனத்தைத் தராது. மாணவர்கள் தினம் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் விளையாடலாம். விளையாட்டு பணம் சம்பாதிக்கக் கூடியதாகவோ, போட்டிகளை உருவாக்கக் கூடியதாகவோ, மனதிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. விளையாட்டு ஒரு பயிற்சியாகவும், பொழுது போக்காகவும் இருக்க வேண்டும். அது பொறாமை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. விளையாடுவது உடம்பை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. விளையாட்டினால் இரத்த ஓட்டம் சீராக பாய்வதால் உடலுறுப்புகள் முழுமையாக செயல்படுகிறது. மூளையும் புத்துணர்ச்சி அடைகிறது. அது படிப்பதற்கு மிகவும் ஏற்றதாக தன்னை தயார் படுத்திக் கொள்கிறது. அபாயகரமான விளையாட்டுக்கள் – பாதுகாப்பில்லாத விளையாட்டுகள் உடம்பை நிரந்தரமாக ஊனமாக்கக் கூடியதாக அமைந்துவிடும். பிறரைக் காயப்படுத்தும் அளவிற்கு வெறித்தனமாக விளையாடினால் அது நிரந்தர பகைமையையும் உண்டாக்கிவிடும். விளையாட்டே வினையாகிவிடக் கூடாது.

பொதுத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு: ஒரு நாளைக்கு அரைமணி நேரம் இலகுவான விளையாட்டுக்களை விளையாடலாம். அல்லது அந்த நேரத்தில் சக தோழர்களுடனோ, உறவினர்களுடனோ  சாதாரணமாக பேசி  மன அமைதி பெறலாம். இந்த சமயங்களில் அரசியல் மற்றும் விவாதங்கள் பண்ணுவது கூடாது. ஸ்கிப்பிங், டேபிள் டென்னிஸ் போன்ற காயம் ஏற்படுத்தாத விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து விளையாடுவது நல்லது. பொதுத் தேர்வு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் அதைப் பற்றி எண்ணமே உன் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். படிப்பைப் பற்றிய எண்ணம் மாறிவிடும்.

விiயாடும்போது உனக்கு ஒத்துப் போகக் கூடிய உனது உற்ற நண்பர்களுடன் விளையாடினால் அதில் போட்டி, பொறாமை வர வாய்ப்பில்லாமல் போய் விடும். நன்றாக விளையாடினால் உனக்கு தூக்கம் நன்றாக வரும். அதனால் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். அதற்கு இந்த விளையாட்டு கை கொடுக்கிறது. மாணவர்களை எப்போதும் விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. தேர்வுகாலம் முடிந்தபின் நன்றாக விளையாடிக் கொள்ளலாம். நீங்கள் விளையாடுவதை தள்ளி வைக்க சொல்கிறோமே தவிர விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை.

சுத்தமாக இருத்தல்:

தங்களது உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு நில்லாமல் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நோய் நொடி வருவதை தவிர்க்க இயலும். தினமும் குளித்தல், முடி வெட்டுதல், சாப்பிடும் முன் கைகளை சுத்தப் படுத்துதல், சுத்தமாக  பல் விலக்குதல், வாரம்தோறும் நகம் வெட்டுவது போன்றவற்றில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். சுத்தம் மனதிற்கு அமைதியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். படிப்பதற்கு உறுதுணையாக இது இருக்கும். உடையை அழகாகவும், தூய்மையாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அது உன் தோற்றத்தை அழகாக அமைத்திடும். இது மனதிற்கு ரம்மியமான உணர்வைத் தரும். அதனால் மனம் ஒருமைப்பட்டு படிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்.

6. தேர்வு முடிந்தவுடன்:

ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தவுடனேயே நம்முடைய சீனியர் மாணவர்களிடம் புத்தகம், பழைய கேள்வித் தாள்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பழைய புத்தகங்கள் வாங்குவது படித்த மாணவர்கள் அப்புத்தகத்தில் முக்கிய குறிப்புகளை அதில் எழுதியிருப்பார்கள். அது நமக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

விடுமுறை நாட்களில் புனிதத் தலங்களை தரிசிக்க பயணம் செல்லலாம். சுற்றுலா தலங்களை பார்வையிட செல்லலாம். தட்டெழுத்து(வுலிந றுசவைiபெ), கணிணி(ஊழஅpரவநச), கோர்ஸ்கள் படிக்கலாம். தட்டெழுத்து பயிற்சி பெறுவது கணிணி பயன்பாட்டிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பொது அறிவை வளர்ப்பதற்கு தினமும் வாசகசாலை(டுiடிசயசல) சென்று நல்ல புத்தகங்கள் படிக்கலாம். இதனால் வாசிக்கும் திறனும் மேம்படும்.

அடுத்த மேற்படிப்புக்குரிய பாடங்களை தினமும் ஒரு மணிநேரம் படிப்பதற்கு செலவழிக்கலாம். நம்முடைய நேரத்தை இவ்வாறு நல்ல வழியில் செலவழிக்கலாம். ஒரு பாடத்தை முன்னதாகவே படிப்பதால் பள்ளியில் அந்தப் பாடம் நடத்தும் போது நாம் வாசித்த பாடம் நமக்கு பரிச்சயமானதாக இருக்கும், அப்பாடம் பல நாட்களானாலும் நம் மனதில் பதிந்து இருக்கும்.

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன், மார்க்க அகீதா விஷயங்களை நன்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு பயிற்சி பெறும்போது, கல்லூரிகளில் நம்மிடையே கேட்கப்படும் மார்க்க வினாக்கள் மற்றும் கொள்கை வினாக்களுக்கு தக்க பதிலளித்து நல்ல விஷயங்களை தொடர்ந்து பின்பற்றலாம்.

மாணவர்கள் தங்களுக்குத் தெரியாத மார்க்க விவாதங்களில் பங்கு பற்றக் கூடாது. மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆலிம்களிடம் நாம் விட்டு விட வேண்டும். இதுவே நம் முன்னோர்கள் கடைபிடித்த வழிமுறையாகும். எந்த ஒரு துறையாக இருந்தாலும் தெரியாத விஷயங்களை தெரிந்தவர்களிடம் கேட்பதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. அதுதான் உண்மையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஆனால், இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் எவர் சொன்னாலும் கேட்பதும், அதில் விவாதம் செய்வதும் அதன்படி நடப்பதும் கெட்ட வழக்கமாக இருக்கிறது. இதை முதலில் சிந்தித்து மார்க்க விஷயங்களை தெரிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

அகீதா (இஸ்லாமிய கொள்கைகள்): ஷpர்க், தவ்ஹீது, நான்கு மத்ஹபுகள், ஜியாரத், வஸீலா, மௌலிது, மீலாது, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வைக்கக் கூடிய நேசம், இறைநேசர்களைப் பற்றிய தெளிவான விளக்கங்கள், இஸ்லாத்தில் தோன்றிய கூட்டங்கள், ஈஸா நபி பற்றிய நமது கொள்கை நிலைபாடு, பல தெய்வ வழிபாடு மற்றும் ஏனைய கொள்கை சித்தாந்தங்களை நாம் தெளிவாக அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஃபிக்ஹு (இஸ்லாமிய சட்டதிட்டங்கள்): பயணங்களில் தொழப்படும் கஸ்ரு மற்றும் ஜம்உ பயணங்களில் ஏற்படும் நஜீஸ்கள், ஜும்ஆ தொழுகை வெளியூரில் அல்லது வெளி இடங்களில் இருக்கும் பொழுது எவ்வாறு தொழுவது, ஹலால் மற்றும் ஹராம், பிற மத விழா உணவுகள், அவ்காத் ஸலாத், நோன்பு பிடித்தல் மற்றும் சஹ்ர் நேர முடிவு போன்ற பல்வேறு சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

புனித குர்ஆனை வழமையாக ஓதி வர வேண்டும். மற்றும் முக்கியமான ஓதுதல்கள் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கும், தாங்கள் படித்த பாடங்கள் மனதில் தங்குவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தேவையான ஓதுதல்களை பெரியவர்களிடம் கேட்டு ஓதிக் கொள்ள வேண்டும்.

ஜாதி, மதம், இனப் பாகுபாடின்றி அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

நம்முடைய நேரத்தை இஸ்லாமிய புத்தகங்கள் என்று சொல்லப்படக் கூடிய தேவையில்லாத புத்தகங்களை வாசிப்பதிலோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதிலோ மற்றும் தேவையில்லாத விவாதங்களில் கலந்து கொள்வதிலேயோ நேரத்தை செலவழிக்கக் கூடாது.

முடிவுரை:

மாணவ மணிகள் வெற்றி பெற சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. அதை செயல்படுத்தினால்தான் வெற்றி பெற  முடியும். நீங்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திட எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி!

மின்னஞ்சல்/E-mail:[email protected]

ஆக்கம்:M.I. செய்யிது முஹம்மது புஹாரி M.E.,P.hD.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…