Home கல்வி Indian Institute of Technology (IIT) ஓர் அறிமுகம்
கல்வி - September 29, 2010

Indian Institute of Technology (IIT) ஓர் அறிமுகம்

Indian Institute of Technology (IIT)  ஓர் அறிமுகம்

1. Indian Institute of Technology (IIT)  என்றால் என்ன?
இந்தியாவிலுள்ள 15 உயர்தரமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் IIT என்று அழைக்கப்படும். ஆரம்ப காலத்தில் வெளிநாட்டு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

 

2. IIT கல்வி நிறுவனம் எங்கெல்லாம் இயங்குகிறது?
 

15 IITs (Established as IIT):

 Kharagpur(West Bengal:1951)

Mumbai(Maharastra:1958)

Chennai(Tamil Nadu:1959)

Kanpur(Uttar Pradesh:1959)

Delhi(1963)

Guwahati(Assam:1994)

Roorkee(Uttarkhand:2001)

Patna(Bihar:2008)

Rajasthan(2008)

Bhubaneswar(2008)

Gandhinagar(Gujarat: 2008)

 Ropar(Punjab:2008)

 Hyderbadad(2008)

Indore(Madhya Pradesh:2009)

Mandi(Himachal Pradesh:2009).

 

3. IIT-யில் சேர்வது எப்படி?

இளநிலை படிப்பில் சேர்வதற்கு IIT-JEE தேர்வும் முதுநிலையில் சேர்வதற்கு Graduate Aptitude Test in Engineering (GATE)[For M.Tech]அல்லது Joint Management Entrance Test (JMET)[For Management Studies]அல்லது Joint Admission to M.Sc (JAM)[For M.Sc] அல்லது yJCommon Entrance Examination for Design (CEED) [For M.Des] தேர்வும் எழுத வேண்டும்.

IIT
IIT

4. IIT-JEE என்றால் என்ன?

IIT-யில் Bachelor degree  படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் தேர்வுக்கு IIT-Joint Entrance Examination (IIT-JEE) என்று  அழைக்கப்படும்.
 IIT-JEE தேர்வு மூலம் Institute of Technology-Banaras Hindu University> Varanasi (IT-BHU) மற்றும் Indian School of Mines> Dhanbad (ISM-Dhanbad)–யிலும் சேரலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8000 இளநிலை மாணவர்களும் 2000 முதுநிலை மாணவர்களும் சேர்க்கப்படுகிறார்கள். இளநிலை படிப்பதற்க்கு IIT-JEE தேர்வை ஆண்டுதோறும் ஏறத்தாள 300000 மாணவர்கள் எழுதுகிறார்கள்.

 

5. IIT-JEE தேர்வு எழுத என்ன தகுதிகள் தேவை?

மாணவர்களை 6 பிரிவாக பிரிக்கிறார்கள். அவை

General(GE)

Other Backward Classes (OBC)

Children of defence/paramilitary personnel killed or permanently disabled in action during waror peace-time operations (DS)

Scheduled Castes (SC)

Scheduled Tribes (ST)

Persons with Phyiscal Disability (PD)  ஆகும்.

இதில் முஸ்லிம்கள் பொதுவாக OBC-யின் கீழ் வருவார்கள்.

• OBC-யின் உட்பிரிவுகள்: OBC(Creamy Layer) and OBC(Non-Creamy Layer).  ஆண்டு வருமானம் 4 இலட்சத்துக்கு கீழ் இருந்தால் OBC(Non-Creamy Layer) என்று அழைக்கப்படும்.

GE, OBC, DS  ஆகிய பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு: 2011-ல் IIT-JEE எழுதுவதற்கு அக்டோபர் 01, 1986-லோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

• SC, ST ஆகிய பிரிவை சோ்ந்தவர்களுக்கு வயது வரம்பு: 2011-ல் IIT-JEE எழுதுவதற்க்கு அக்டோபர் 01, 1981-லோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

• IIT-JEE தேர்வை 2011-ல் எழுதுவதற்க்கு +2 தேர்வை 1 அக்டோபர் 2009-ல் அல்லது 2010 அல்லது 2011-ல் எழுதிய/எழுதுபவராக இருக்க வேண்டும்.

• +2 தேர்வில் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள்:
             GE, OBC, DS – 60%

             SE,ST, PD – 55%

 

6. IIT-JEE தேர்வை எத்தனை முறை எழுதலாம்?

தொடர்ந்து இரண்டு முறை எழுதலாம். ஒரு முறை படிப்பதற்கு அனுமதி பெற்று, பணமும் செலுத்தி இருந்தால், மீண்டும் தேர்வு எழுத முடியாது.

 

7. IIT-யில் மாணவர்களுக்கு இடஓதுக்கீடு உண்டா?

 

SC: 15%

ST: 7.5%

OBC (Non-Creamy Layer): 27%

PD: 3%

குறிப்பு: தேவையாண அளவு ளுஊ மாணவர்கள் IIT-JEE யில் தகுதி பெறாவிட்டால், 1 வருட தகுதி வகுப்புகள் நடத்தி, அடுத்த ஆண்டு IIT-யில் சேர்க்கப்படுவார்கள்.

8. IIT-JEE  தேர்வு எழுதுவதற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்யவேண்டும்?

Internet , Newspaper  மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
• Internet மூலமாக விண்ணப்பம் செய்வதற்க்கு SC,ST,PD, female பிரிவுக்கு 450 ருபாயும் மற்றவர்கள் 900 ருபாயும் செலுத்த வேண்டும்.

• Paper மூலமாக விண்ணப்பம் செய்வதற்கு SC, ST, PD female பிரிவுக்கு 500 ருபாயும் மற்றவர்கள் 1000 ருபாயும் செலுத்த வேண்டும்.

• தமிழ் நாட்டில் விண்ணப்ப படிவத்தை Indian Bank மற்றும் பல இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

• அடுத்த ஆண்டு April மாதத்தில் நடத்தப்படும் IIT-JEE தேர்வுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இந்த ஆண்டு November முதல் வாரத்தில் இருந்து December மாத முதல் வாரம் வரை ஒப்படைக்கலாம்.

 

9. IIT-யில் படிப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும்?

IIT-யில் படிப்பதற்கு ஆகும் செலவு ஒவ்வொரு இடங்களை (IIT locations) பொருத்து கட்டணம் மாறுபடும். ஒரு Semester-க்கு ஏறத்தாழ 25,000 ருபாய் செலுத்த வேண்டும். முதல் Semester கட்டணத்துடன் 10,000 ருபாய் அதிகப்படியாக செலுத்த வேண்டும்.

குறிப்பு:
 SC, ST மாணவர்களுக்கு Semester கட்டணம் 10,000 ருபாய்.

 

10. IIT-JEE தேர்வு எவ்வாறு இருக்கும்?

• தனித்தனியான இரு தேர்வுகள் முன்று மணி நேரம் இருக்கும்.

• இரு தேர்வுகளிலும் Physics, Chemistry, Mathematics  ஆகிய பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இவை Objective type ஆக இருக்கும்.

• தமிழ் நாட்டில் Chennai, Coimbatore, Trichy, Salem, Madurai, Tirunelveli ஆகிய ஊர்களில் தேர்வு நடைபெறும்.

IIT-JEE தேர்வு வினாக்கள் Englih அல்லது Hindi-யில் இருக்கும்.

குறிப்பு:
IIT-JEE Answer Sheetia Machine grade  பண்ணப்படுவதால் regrading மற்றும் retotal கிடையாது. Answer Sheetil Photocopy  பண்ணி பார்க்கவும் முடியாது.

தேர்வு முடிந்து ஒன்றரை மாதம் கழித்து முடிவு அறிவிக்கப்படும்.

 

11. IIT-யில் உள்ள Courses எவை?

 B.Tech (4 Years)

 B.Pharm (4 Years)

 B.Des (4 Years)

 B.Arch (5 Years)

 M.Pharm Dual Degree (5 Years)

 M.Sc.) Integrated (5 Years)

 BS & MS Dual Degree (5 Years)

 MSc. Tech. Integrated (5 Years)

 M.Tech. Integrated (5 Years).

 

12. IIT-JEE தேர்வு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

IIT-JEEயில் உள்ள இரண்டு தேர்வுகளையும் எழுதினால் மட்டுமே IIT-JEE மதிப்பெண் பெற தகுதி பெறுவார்கள். இரண்டு தேர்வுகளிலும் உள்ள Physics, Chemistry, Mathematics ஆகிய 3 பாடங்களும் தனித்தனியே சேர்க்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்க்கும் 160-க்கு எத்தனை மதிப்பெண்கள்  எடுக்கப்பட்டதோ அது வழங்கப்படும். 3 பாடங்களிலும் மாணவர்கள் எடுத்த average மதிப்பெண்கள் Minimum Qualifying Marking for Ranking(MQMR) ஆக கருதப்படும். MQMR கொண்டு எந்த வித relaxation-யில்லாமல் Common Merit List(CML)  தயார் செய்யப்படும். CML ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை IIT-JEE ஐஐவு-துநுநு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யும் கல்லூரிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும். CML ல் உள்ள கடைசி மாணவரின் aggregate மதிப்பெண் cut-off score (CCS) மார்க்காக கருதப்படும்.

• OBC மாணவர் List : CML யில் உள்ள CML மாணவரின் எண்ணிக்கை ழுடீஊ ளநயவ  எண்ணிக்கையை விட 1.4 மடங்கு அல்லது அதை விட அதிகமாக இருந்தால் CML யில் உள்ள அனைத்து மாணவர்களும் OBC List ஆக கருதப்படும். அப்படியில்லை என்றால் MQMR & CCS 10%  வரை குறைக்கப்பட்டு SC, ST, PD List தயார் செய்யப்படும்.

• S.C., S.T., P.D. மாணவர் List: MQMR & CCS 50% வரை குறைக்கப்பட்டு SC, ST, PD List தயார் செய்யப்படும்.

• Waiting List கிடையாது.
OBC  க்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரம்பாவிட்டால், GE Quota மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆணால், SE Quota அப்படி நிரப்பபடமாட்டாது.

13. IIT-JEE யில் இரு மாணவர்கள் சம மதிப்பெண் பெற்றால் என்ன செய்யப்படும்?

எந்த பாடத்தில் MQMR குறைவாக உள்ளதோ அந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க்கு நல்ல rank வழங்கப்படும். அது சமமாக இருப்பின், இரண்டவது MQMR குறைவாக உள்ள பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்க்கு நல்ல rank வழங்கப்படும். அதுவும் சமமாக இருப்பின், சமமாக rank வழங்கப்படும்.

 

14. IIT-JEE நுழைவு தேர்வைத் தவிர வேறு தேர்வு உண்டா?
 

•              Counselling

•              Medical Examination

•              Mining Course: Colour Blindness test. ISM-Dhanbadதில்  பெண்களுக்குMining Course செய்ய அனுமதியில்லை.

•              B.Arch, B.Des: முன்று மணி நேர Aptitude தேர்வு உண்டு.

 

15. IIT-JEE தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்?

• தவக்கல், நல்லோர்களின் துஆ பரக்கத்து
• விடா முயற்சி
• தொலைநோக்கு சிந்தனை
• ஒரு அல்லது இரண்டு ஆண்டு கடின உழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…