பொது
நோய் நொடிகள் நீங்கிட
ஊரில் காலரா, பிளேக் போன்ற நோய், நொம்பலங்கள், துன்பங்கள் அதிகரித்து விட்டால் ஊரின் நான்கு மூலை சந்துகளில் கூடியிருந்து புனித புகாரி ஷரீஃப் கிரந்தத்தை ஓதுவார்கள். அடுத்து காவலாய் நிற்கும் வல்லோன் என்ற பைத்தையும், ஏனைய பைத்துகள், கஸீதாக்களை உருக்கமாக படித்தும், உருக்கமாக துஆ பிரார்த்தனை கேட்டும், சதக்கா (தர்மம்) கொடுத்தும் சில நாட்கள் மஜ்லிஸை நடத்துவார்கள். இதன்பயனாக ஊரில் பிரச்சனைகள் தீர்ந்து, நோய் நொம்பலங்கள் இல்லாமலாகிவிடும். இது நடைபெற்றுக்…
Read More »திருமண வைபங்கள்
பெண்கள் வயதுக்கு வருதல் பெண்கள் வயதுக்கு வந்தது தெரிந்ததும் அதை சொந்த பந்தங்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் சொல்லியனுப்புவார்கள். வயதுக்கு வந்த பெண்ணை அலங்காரம் பண்ணி தண்ணீர் ஊற்றும் வரை வைத்திருப்பார்கள். சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள் வந்து பார்த்து முகர்ந்து 'கூடிய சீக்கிரம் திருமணம் வரட்டும்' என்று துஆ செய்து செல்வார்கள். அந்தப் பெண்ணிற்கு அன்பளிப்பு பணமாகவும், பொருட்களாகவும் கொடுப்பார்கள். தண்ணீர் ஊற்றும் நாளில் சொந்தபந்தங்களை அழைத்து விருந்து வைப்பார்கள். இது சில…
Read More »கர்ப்பிணிகளுக்கு மூன்று மாத துஆ
பெண்கள் குழந்தை உண்டாகியது தெரிந்ததும், பரிசோதித்து விட்டு தங்கள் சொந்தம் பந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இச் செய்தி பற்றி சொல்வார்கள். கர்ப்பிணியை மிகவும் பத்திரமாக பாதுகாத்து அவளுக்குத் தேவையானவைகளை சீரோடும் சிறப்போடும் செய்வார்கள். மூன்று மாதம் ஆனதும் குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பிற்காக மூன்று மாத காவல் துஆ ஒன்றை போடுவார்கள். அதை எழுதித் தருவதற்கென்றே ஆலிம்களும், பெரியவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய ஹதியாக்களை அதற்கென்று கொடுத்து விடுவார்கள். தாய் எவ்வித கஷ்டமும் இன்றி…
Read More »ஹிஜ்ரி புத்தாண்டு 1432
ஹிஜிரி ஆண்டு அரபுகள் பிரபலமான மறக்க முடியாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயராகச் சொல்வார்கள். அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான். அந்த யானைப் படையை அல்லாஹ் பறவைகளைக் கொண்டு அழித்தான். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள். உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தனது ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் தனியாக ஆண்டுகள் கணக்கிட வேண்டும் என்ற…
Read More »மஹ்லறா கந்தூரி
மஹ்லறாவில் ரபீயுல் ஆகிர் மாதம் கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக கந்தூரி விழா எடுக்கப்படுகிறது. பிறை 1 அன்று மகான் அவர்கள் பெயரால் கொடியேற்றம் நடைபெறுகிறது. (தற்போது இது நடைபெறுவதில்லை) 1. பிறை 1 முதல் 11 வரை காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மகான் அவர்களின் பெயரால் புனித மௌலிது ஷரீஃப் ஓதப்படுகிறது.…
Read More »தாய்ப்பால்
குழந்தை பெற்றுக் கொண்டதும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.தங்கள் அழகு கெட்டுவிடும் என்றும், இன்னும் பிற காரணங்களாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கின்றனர். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாயையும் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்து மேம்படச் செய்கிறது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது: தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள…
Read More »அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசனங்கள் அருளப்பட்டால் அந்த வசனங்களையும் உடனே எழுதச் சொல்வார்கள். அதுதோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். இவ்வாறு ஒவ்வொரு முறை வஹி அருளப்படும்பொழுதும் செய்து வந்தார்கள். இந்த ஆயத்தில் இந்த ஸூராவில் சேர்க்கப்படவேண்டும் என்றும்,இந்த வசனத்திற்குப் பிறகு இந்த வசனம் சேர்க்கப்பட வேண்டும்என்றும் வரிசைப்படுத்தி சொல்வார்கள். அதுபடி எழுதப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம்…
Read More »கிராஅத்துக்களின் வகைகள்
ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வேறு வேறு சட்டத்தை பிரயோகிப்பது. ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி ஒரே வார்த்தையை வேறு வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம்,நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு…
Read More »நபிமொழி அறிவிப்பாளர்கள்
ஸஹாபாக்களில் ஒருஹதீஸிலிருந்து 1000 க்குமேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை அறிவித்தவர்கள் 500 பேர்கள். இவர்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூஹூரைரா (ரலியல்லாஹு அன்ஹு அவர்களைசாரும். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை சாரும். நபித்தோழர்களில்அறிவிப்பாளர்கள் (ராவிகள்) அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை அபூஹூரைரா(ரலியல்லாஹுஅன்ஹு 5374 அப்துல்லாஹ்இப்னுஉமர்(ரலியல்லாஹுஅன்ஹு) 2630 அனஸ்இப்னுமாலிக்(ரலியல்லாஹுஅன்ஹு) 2286 ஆயி்ஷாஸித்தீக்கா(ரலியல்லாஹுஅன்ஹு) 2210 அப்துல்லாஇப்னுஅப்பாஸ்(ரலியல்லாஹுஅன்ஹு) 1660 ஜாபிர்இப்னுஅப்துல்லாஹ்(ரலியல்லாஹுஅன்ஹு) 1540…
Read More »ஹதீஸ் நூற்களின் வகைகள்
ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. ஸுனன் தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும். புகாரி , முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ ரலியல்லாஹு அன்ஹும் போன்ற…
Read More »