Uncategorized
தொழுகையின் ஒழுக்கங்கள்
தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பள்ளிவாயிலில் கூட்டாகத் தொழ…
Read More »தொழுகையின் சிறப்புக்கள்
இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும். அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும். இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும்…
Read More »இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.
அருமை நாயகத்தின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்களின் வழியில் எட்டாவது தலைமுறையில் தோன்றிய இத்ரீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வரே இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் ஹிஜ்ரீ 150 ம் ஆண்டு ஷஃபான் பிறை இரண்டாம் நாள் பாலஸ்தீனில் உள்ள காஸா ஊரில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இரண்டாவது வயதிலேயே தந்தையார் காலமாகி விட்டதால் தாயார் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், குழந்தையுடன் தங்கள் முன்னோர்களின்…
Read More »நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்:
இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களில் இறுதியாக வந்தவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள். அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆமினா ரலியல்லாஹு அன்ஹா ஆகிய தம்பதிகளின் மகனாக பனூஹாஷிம் கிளையில் கி.பி.571 ஏப்ரல் திங்கள் 20 (ரபியுல் அவ்வல் 12)ஆம் நாள் திங்கட்கிழமை பிறந்தார்கள். தம் தாயின் வயிற்றிலிருக்கும்போது தந்தையையும், ஆறாவது வயதில் தாயையும், எட்டாவது வயதில் தம்மை வளர்த்து வந்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களையும்…
Read More »ஈமான்
அல்லாஹ்வையும் அவனுடைய அமரர்களையும், நபிமார்களையும், வேதங்களையும் இறுதி நாளையும், நன்மை தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதையும் உளமாற நம்பி உறுதி கொள்வது ஈமானின் அடிப்படையாகும். அல்லாஹ்: பரம்பொருளான அல்லாஹுதஆலா ஏகனாக, நித்திய ஜீவியாக இருக்கின்றான். அவன் ஆரம்பமும், முடிவும் இல்லாதவனாக எல்லா அம்சங்களிலும் படைப்பினங்களுக்கு வேறுபட்டவனாக தானாகவே இயங்குபவனாக, சிருஷ்டிகளைப் படைத்து இயக்குபவனாக, பிற பொருளின் பால் எவ்விதத் தேவையும் இல்லாதவனாக இருக்கிறான். இறைவனுக்கே உரிய முறையில்…
Read More »ரஹ்மத்துன்லில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள்
மீலாது கட்டுரை: அனைவருக்கும் மீலாது நபி பெருநாள் வாழ்த்துக்கள்!! தொகுப்பு:W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளிவினால்படைக்கப்பட்டவர்கள். எல்லா நபிமார்களுக்கும், ரஸூல்மார்களுக்கும் அவர்கள்தலைவரானவர்கள். நாளை மஹ்ஷரில், பாவக்கடலில் மூழ்கிய பாவிகளுக்கு "ஷபாஅத்" எனும்மன்றாட்டம் புரிந்து அவர்களின் மனக்குழப்பங்களையும், கவலைகளையும் போக்கி சுவனத்தைபெற்றுத் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள். கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுவர்க்கத்தின் அதிபதியாகவும்,…
Read More »அல்லாஹ்வின் திக்ரின் சிறப்புகள்
தொகுப்பு:W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் ஹஜ்ரத் அபூதர்தா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை நோக்கி,உங்களுடைய இறைவன் அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்வான,தூய்மையான ஒரு செயல்,அது உயர்ந்த தரஜாவை கொடுக்கும்,அல்லாஹ்வின் பாதையில் தங்கம்,வெள்ளி இவைகளை செலவு செய்வதை காட்டிலும்,எதிரிகளின் தலையை வெட்டி வீழ்த்துவதை விடவும் மிகவும் மேலானது.அப்படிபட்ட ஒரு செயலை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா?என வினவினார்கள். ஸஹாபாக்களும் ஆம்,யாரஸூலல்லாஹ்! கூறுங்கள் என்றனர். அது தான் “திக்ருல்லாஹ் “ (இறை தியானம்)…
Read More »நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகள்.
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தன என்பது நம் அனைவர்களுக்கும் தெளிவாகத் தெரியாது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் மிகத் தெளிவாக தரீகுல் குமைஸ், ஜர்கானி, தல்கீஹ், அஸதுல் காபா, இஸாபா போன்ற நூல்களில் எழுதியுள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் குழந்தைகள் மொத்தம் 4. 1. ஹ்ரத் ஜைனப்…
Read More »மாபாதகர்கள் முன்னிலையிலும் உண்மையே பேசிய உத்தமர்
பாரசீக நாட்டில் ஜீலான் என்ற நகரில் நபிகள் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச பரம்பரையில் வந்த பாத்திமா அபூசாலிஹ் என்ற தம்பதிகள் சீரும் சிறப்புமாக இஸ்லாமிய நெறி தவறாது வாழ்ந்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு புனித நோன்பு பிறை 1 அன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அப்துல்காதிர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அப்துல்காதிர் அவர்கள் சிறுவயது பிராயத்திலேயே இஸ்லாமிய மார்க்க கல்வியை…
Read More »விருந்து வைபவங்கள்
நமது நகர் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். நமதூரில் விருந்துகள் திருமணத்தை ஒட்டி வைக்கப்படும் வலீமா, மருவுணம், தண்ணிக் குடி சாப்பாடு, குட்டி மருவுண விருந்துகளும், சுன்னத் மற்றும் பெண்கள் பாலிகானதை ஒட்டி வைக்கப்படும் விருந்துகளும், பிள்ளைகள் பெயர் விடும் வைபவம், மாப்பிள்ளை பேசியதற்கு வைக்கப்படும் விருந்துகளும்,கந்தூரியில் வைக்கப்படும் விருந்துகளும், நண்பர்கள் சேர்ந்து வைக்கும் பார்ட்டி என்ற விருந்துகளும், விருந்தாளிகள் வெளியூர்களிலிருந்து வருகை தந்தால் வைக்கப்படும் விருந்துகளும், ஹஜ்ஜிற்கு…
Read More »