Home Uncategorized ரஹ்மத்துன்லில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள்

ரஹ்மத்துன்லில் ஆலமீன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகள்

மீலாது கட்டுரை: அனைவருக்கும் மீலாது நபி பெருநாள் வாழ்த்துக்கள்!!

தொகுப்பு:W.S.S. மும்மது முிய்யத்தீன்
 

மும்மதுல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லா்வின் ஒளிவினால்படைக்கப்பட்டவர்கள். எல்லா நபிமார்களுக்கும், ரஸூல்மார்களுக்கும் அவர்கள்தலைவரானவர்கள். நாளை மஹ்ஷரில், பாவக்கடலில் மூழ்கிய பாவிகளுக்கு "ஷபாஅத்" எனும்மன்றாட்டம் புரிந்து அவர்களின் மனக்குழப்பங்களையும், கவலைகளையும் போக்கி சுவனத்தைபெற்றுத் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்.

கண்மணி  நாயகம்   மும்மது  மு்தபா   ரஸூலே  கரீம்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள்  சுவர்க்கத்தின்  அதிபதியாகவும், வல்ல அல்லா்வின் அருட்கொடைகளை பகிர்ந்தளித்து வழங்ககூடியவர்களாகவும் இருக்கிறார்கள். வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் விடமிகுந்த மதிப்பும், மரியாதையும் பெருமையும் மிக்கவர்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாுஅலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பினால், அல்லா்வின் அர்ஷ், குர்ஷ் மற்றும் எல்லாப்படைப்பினங்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தன.

அல்லாஹ்  ஜல்ல  ஜலாலஹு   தனது   அருள்மறையாம்  திருக்குர்ஆனில்  ஹபீப்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்களைப்  பற்றி இவ்வாறு புகழ்ந்து கூறுகிறான், நபியே! நாம் உங்களை அகிலஉலகத்தார் அனைவர்களுக்கும் "அருட்கொடையாக" அன்றி அனுப்பவில்லை. (ஸூரா 21, ஆயத்:107). நிச்சயமாக உங்களில் இருந்தே நன்மாராயம் சொல்லக்கூடிய ஒரு தூதுவர் வந்துஇருக்கிறார், அவருக்கு உங்களுடைய துன்பங்கள் மிகுந்த வேதனையை கொடுக்கும், உங்கள்நல்வாழ்வு மீது மிகுந்த ஆவலும், ஆசையும் உள்ளவர், மு்லிம்களான உங்கள் மீது மிக்கஅன்பும், கருணையும் உடையவர். (ஸூரா 9, ஆயத்: 12)

கல்புக்கனி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பரிபூரண மனிதருல் புனிதர்மட்டுமல்ல, மனித குலத்தில் மிக்க புகழும்,  கீர்த்தியும்  உடையவர்கள். அவர்கள்  ஒரு குறிப்பிட்ட  நாடு,  நகரம்  இனத்துக்கு  மட்டும்  உரியவர்கள்  அல்ல,  கியாம  நாள்  வரை  உலகங்கள் அனைத்திற்கும் அருளாக வந்து உதித்தவர்கள். உலகத்தில் உள்ள எல்லா வளமும், நன்மையும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாராக்கான கால்பாதத்தின் கீழ் தான்உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாம் அடையக் கூடிய அனைத்து வழிகளும், படித்தரங்களும் எஜமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டேயல்லாது வேறுஎவ்வழியும் அறவே இல்லை. எனவே நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், பேச்சிலும், நடையிலும், நொடிப் பொழுதிலும் கண்ணின் மணியாம் கல்புக் கனியாம் ரஹ்மத்துன் லில்ஆலமீன், ஷஃபிஉல் முத்னிபீன், நூருல்லாஹ் முஹம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்பொழுதும் மாசற்ற பிரியமுடன் நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அருள்மறையாம்  அல்குர்ஆனில்  அல்லாஹ்  ஜல்ல  ஜலாலஹு  கூறுகிறான், “நிச்சயமாக  அல்லாஹ்வும்  அவனது  மலக்குமார்களும்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுகிறார்கள், ஈமான் கொண்டவர்களே! நீங்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்”. (ஸூறா 33, ஆயத்: 56)

ஹஜ்ரத்  அனஸ்  ரழியல்லாஹு  தஆலா  அன்ஹு  அறிவிக்கிறார்கள், “ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள் கூறினார்கள் “யார்  ஒருவர்  என்  மீது  ஒருமுறை  ஸலவாத்து  சொன்னால், அல்லாஹ்  அவர்கள்  மீது  பத்து  நன்மைகளை  இறக்குகிறான், அவரின் பத்து பாவங்களை மன்னிக்கிறான், அவரின் பத்து தரஜாவை உயர்த்துகிறான்”. (மிஸ்காத்)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள், செய்யிதுனா ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “கியாமத் நாளையில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் யாரெனில், என் மீது அதிகமதிகம் ஸலவாத் கூறியவரே ஆவார்”. (திர்மிதி)

செய்யிதுனா  ரஸூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள்  மீது  ஸலவாத்  சொல்வது,  மிகவும்  உயர்வானதும்  மிக்க நன்மை அளிக்கக்கூடியதுமான காரியமாகும். ஸலவாத் கூறுபவர் மீது, நிச்சயமாக அல்லாஹ் தஆலா அளப்பற்ற அருளையும், அன்பையும், பரக்கத்தையும் பொழிகிறான். மேலும் இவ்வுலகத்தில் அதிகமான நன்மைகளையும், மறுஉலகத்தில் உயர்பதவிகளையும், எல்லாவற்றிக்கும் மேலாக பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்கும் ஆளாகும் பாக்கியத்தை பெறுகிறார் ஸலவாத் உரைப்பவர். அவரின் உள்ளம் தானாகவே, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பினால் பூரிப்படைந்து பிரகாசமடையும்.

ஷெய்குல் அக்பர் ஹஜ்ரத் முஹிய்யத்தீன் இப்னு அரபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் "யார் ஒருவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது களப்பற்ற அன்பும், அவர்களுக்கு முற்றிலும் வழிபட்டு நடக்க ஆசிக்கிறாரோ, அவர் எஜமான்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்கள்  மீது  அதிகமதிகம்  கணக்கில்லாமல்  பொறுமையுடனும், தளரா  ஊக்கத்துடனும் ஸலவாத்  ஓதி  வரட்டும், அவர்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்களின்  அன்பை  பெற்றுக்  கொள்வார், மேலும்  அவருக்கு பெரும்பாக்கியமான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்காட்சியும் கிடைக்க வாய்ப்புண்டு.

ஒருமுறை ஹஜ்ரத் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாலைவனத்தில் நண்பகல் வேளையில் நீண்ட தூரம் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பசியினாலும், தாகத்தினாலும் மயக்கமுற்றார்கள். சிறிது நேரத்திற்கு பின், மயக்கம் நீங்கியதும், அல்லாஹ் தஆலா ஹஜ்ரத்  ஜிப்ரீல்  அலைஹிஸ்ஸலாம்  அவர்களை மூஸா  அலைஹிஸ்ஸலாம்  அவர்களிடம்  'தாகமாக  இருக்கிறார்களா? இல்லையா?' என்பதை கேட்டு வருமாறு அனுப்பினான். மூஸா அலைஹிஸ்ஸலாம் தாகமாக இருப்பதாக பதில் அளித்தார்கள்.

அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்,"கியாமத் நாளையில் உண்டாகும் தாகம் இப்போது உண்டாகி உள்ள தாகத்தை விட பத்து லட்சம் மடங்கு அதிகமானது" என்று கூறினான். கியாமத் நாளையில் உண்டாகும் கொடிய தாகத்தில் இருந்து விடுபட வேண்டுமெனில் ஒரு காரியம் செய்தாக வேண்டுமென்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ் தஆலா கூறினான், அவர்கள் அது என்ன? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ் ஹக் ஸுபுஹான ஹுவதஆலா தனது இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம்  அவர்கள்  மீது  அதிகமதிகம்  ஸலவாத்  கூற  வேண்டும்  என்று  கூறினான். ஹஜ்ரத்  மூஸா  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உடனடியாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதினார்கள். இதிலிருந்து  நாம்  விளங்கிக்  கொள்வது, அல்லாஹ்  தஆலா  தனது  இறுதி  தூதர்  ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம் அவர்கள்  மீது ஸலவாத்  ஓதும்படி  அன்பியாக்களுக்கே  உத்தரவு  பிறப்பித்தான் எனில், ஸலவாத்தாகிறது  இவ்உலகத்திலுள்ள  அனைத்து விதமான இன்னல்களையும், நோய்களையும் நீக்கும் அருமருந்து மட்டுமல்ல, மறுஉலக வாழ்க்கைக்கும் ஏற்றத்தை தரக்கூடியது என்பது புலப்படும்.

ஹஜ்ரத் பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதன்முதலில் பீவி ஹவ்வா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களை பார்த்தபொழுது  நெருங்க  முற்பட்டார்கள். ஆனால்  அல்லாஹ் தஆலா ஹஜ்ரத்  ஜிப்ரீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்களை  அனுப்பி  தடுத்து விட்டான். அல்லாஹ் தஆலா  ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களிடம், பீவி  ஹவ்வா  ரழியல்லாஹு  தஆலா  அன்ஹா  அவர்களை மனைவியாக அடைய விரும்பினால், அதற்க்குண்டான மஹரை முதலில் வழங்க வேண்டுமென்று கூறினான். அவர்கள் மஹர் என்றால் என்னவென்று வினவ, அல்லாஹ் தஆலா ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக  ஹஜ்ரத்  ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், மஹர் செலுத்தும் முறையாகிறது இறுதி தூதர் ஹஜ்ரத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது மூன்று முறை ஸலவாத் கூற வேண்டுமென்று கூறினான். பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவ்வாறே செய்ய அல்லாஹ் தஆலா, பீவி ஹவ்வா அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மனைவியாக ஆக்கினான்.

தினந்தோறும் ஸலவாத்  ஓதி  வருவது ஒருவனுடைய  உடல்,உள்ளம்  ஆகியவற்றில்  மிகப்பெரிய  பலன்களை  உண்டாக்கும்.அது எண்ணங்களை சுத்தப்படுத்தி செயல்களை அழகாக்கும், உள்ளத்தில் அமைதியையும் நிறைவான மனத்திருப்தியையும் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…