Uncategorized
திசையான், பறை, அடாப்பு, கண்டு சொல்லல், ஜமாஅத் அழைப்பு
பொதுவிழாக்களுக்கு விடுக்கும் அழைப்பு: நகரில் அதிகமதிகமாக பொதுவான விழாக்கள் அப்போதப்பது நடத்தப்படுகிறது. கந்தூரி விழாக்களுக்கு ஆரம்பத்தில், பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு கொடுப்பது எப்படி என்றால், அனைத்துப் பள்ளிவாயில்கள், சங்கங்களுக்கு கந்தூரி பற்றிய அறிவிப்பு கடிதம், நோட்டீஸ் போன்றவை கந்தூரி விழாக்கள் ஆரம்பிப்பதற்கு சுமார் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படுகின்றன. முன் ஜும்ஆவிலும் விநியோகிக்கப்படுகிறது. பின்பு பெரிய கந்தூரிகளுக்கு – ஒருவர் கந்தூரி விபரங்களை கந்தூரி…
Read More »நோய் நொடிகள் நீங்கிட
ஊரில் காலரா, பிளேக் போன்ற நோய், நொம்பலங்கள், துன்பங்கள் அதிகரித்து விட்டால் ஊரின் நான்கு மூலை சந்துகளில் கூடியிருந்து புனித புகாரி ஷரீஃப் கிரந்தத்தை ஓதுவார்கள். அடுத்து காவலாய் நிற்கும் வல்லோன் என்ற பைத்தையும், ஏனைய பைத்துகள், கஸீதாக்களை உருக்கமாக படித்தும், உருக்கமாக துஆ பிரார்த்தனை கேட்டும், சதக்கா (தர்மம்) கொடுத்தும் சில நாட்கள் மஜ்லிஸை நடத்துவார்கள். இதன்பயனாக ஊரில் பிரச்சனைகள் தீர்ந்து, நோய் நொம்பலங்கள் இல்லாமலாகிவிடும். இது நடைபெற்றுக்…
Read More »கந்தூரி நடத்துவதற்குரிய முன்னேற்பாடுகள்
ஊரில் பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று கந்தூரி நமதூரில் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. அதற்கு என்று நடைமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். 1. கந்தூரி நாள் நெருங்கியதும் கந்தூரிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கூட்டம் கூடி கந்தூரி கமிட்டி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். 2. அதன்பிறகு கந்தூரி பற்றிய விஷயங்களுடன் நோட்டீஸ் அடிக்கப்படுகிறது. அதில் கந்தூரி கமிட்டியினரின் பெயரும், பணம்அனுப்ப வேண்டிய நபரின் பெயர், முகவரியும் இடம் பெற்றிருக்கும். 3. இந்த…
Read More »திருமணம் முடிந்தபின் பயணத்தின் வழக்கங்கள்
திருணம் முடிந்த மாப்பிள்ளை சம்பாதிப்பதற்கு வெளியூர் செல்வதென்றால் தன் தாயார் வீட்டிலிருந்துதான் பயணம் புறப்புடுவது வழக்கம். பெண் வீட்டிலிருந்து முற்கூட்டியே புறப்பட்டு தாயார் வீடு சென்று அங்கிருந்து பயணம் கிளம்புவார்கள். தான் சம்பாதித்ததை தன் தாயாருக்குத்தான் அனுப்பி வைப்பார்கள். அதிலிருந்து தன் மருமகளுக்கு மாத செலவிற்கு மாமியார் அவர்கள் கொடுப்பார்கள். வேறு ஏதேனும் தேவை ஏற்படின் மாமியாரிடமே மருமகள் கேட்டுக் கொள்ள வேண்டும். பயணத்திலிருந்து திரும்பும்போது தனது தாயார் வீட்டில்…
Read More »திருமண வைபங்கள்
பெண்கள் வயதுக்கு வருதல் பெண்கள் வயதுக்கு வந்தது தெரிந்ததும் அதை சொந்த பந்தங்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் சொல்லியனுப்புவார்கள். வயதுக்கு வந்த பெண்ணை அலங்காரம் பண்ணி தண்ணீர் ஊற்றும் வரை வைத்திருப்பார்கள். சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள் வந்து பார்த்து முகர்ந்து 'கூடிய சீக்கிரம் திருமணம் வரட்டும்' என்று துஆ செய்து செல்வார்கள். அந்தப் பெண்ணிற்கு அன்பளிப்பு பணமாகவும், பொருட்களாகவும் கொடுப்பார்கள். தண்ணீர் ஊற்றும் நாளில் சொந்தபந்தங்களை அழைத்து விருந்து வைப்பார்கள். இது சில…
Read More »ஓத வைத்தல்
பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுப்பதற்கென்று வீடுகளிலும், தைக்காக்களிலும், பள்ளிவாசல்களிலும் குர்ஆன் மத்ரஸாக்கள் உள்ளன. இந்த மத்ரஸாக்களில் ஆரம்பமாக குழந்தைகளை அரபி மொழி எழுத்துக்களை கற்றுக் கொடுக்க அனுப்புவார்கள். ஓதிக் கொடுக்கும் நபர்களுக்கு லெப்பைகள் என்று பெயர். மரப்பலகைகளில் மரப்பிசின் கொண்டு தயாரிக்கப்பட்ட கறுப்பு மையினால் எழுத்துக்களை எழுதி ஓதிக் கொடுப்பார்கள். தற்போது எஸ்ஸர்னல் குர்ஆன் என்ற புத்தகம் மூலம் ஓதிக் கொடுக்கிறார்கள். காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும் முன்பும், மாலைல் பள்ளிக்…
Read More »சுன்னத்(கத்னா) வைபவம்
உரிய வயதை அடைந்ததும் ஆண் பிள்ளைக்கு சுன்னத் என்னும் கத்னா செய்து வைக்கிறார்கள். குழந்தைகள் பூமாலையிடப்பட்டடு, அலங்காரம் செய்யப்பட்டு பைத் சொல்லி ஊர்வலமாக செல்கிறார்கள். சொந்தபந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு பிஸ்கட் போன்றவை கொடுக்கப்படுகிறது. சிலர் குழந்தைகளை பல்லக்கு அல்லது குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்கிறார்கள். ஊர்வலம் செல்லும் வழியில் இறைநேசர்களின் கப்ர்களுக்கு பாத்திஹா ஓதப்பட்டு ஜியாரத் செய்யப்படுகிறது. இதற்கு என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய குடிமகன்கள் இதை…
Read More »பெயர் வைக்கும் வைபவம்
முதல் குழந்தைக்கு பெயர் வைக்கும் வைபவம் மிக சிறப்பாக செய்யப்படுகிறது. பெண் வீட்டாரின் செலவிலேயே இது செய்யப்படுகிறது. பெயர் வைக்கும் வைபவத்திற்கு பெண்வீட்டு சொந்த பந்தங்களையும், மாப்பிள்ளை வீட்டு சொந்தபந்தங்களையும் தெரிந்தவர்களையும் அழைத்து வைபவமாக எடுக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு பிஸ்கட், பூந்தி, லட்டு, ஹல்வா போன்ற இனிப்புகள் வழங்கப்படுகின்றன. குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு ஹஜ்ரத்மார்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டு அவர்கள் வந்ததும் வைபவம் ஆரம்பிக்கிறது. லுத்பில் இலாஹி, யா செய்யிதி, யாகுத்பா,…
Read More »குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியவைகள்
குழந்தை உண்டாகி இருக்கும் பெண்ணிற்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைநேசச்செல்வர்கள் பெயரில் நேர்ச்சை வைத்து காசுகளை துணியில் கட்டி தாயாரின் இடுப்பு அரைஞான் கயிறில் கட்டி வைப்பார்கள். குழந்தை பிறந்ததும் அந்த காசுகளை எடுத்து நேர்ந்துவிட்ட இறைநேசச் செல்வர்களின் மக்பராக்களில் சென்று செலுத்துவார்கள். சாதாரணமாக முன்பு பெண்கள் குழந்தைகளை வீடுகளில்தான் பெற்றெடுப்பார்கள். அதன் பின் அரசு மருத்துவமனையிலும், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைபேறு செய்கிறார்கள். சாதாரண பிரவசமாக…
Read More »பேறுகால சாமான்கள் கொடுக்கும் வைபவம்
காயல் நகரில் பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை செல்லும் வழக்கம் உள்ளது. எனவே பெண்கள் பிள்ளை உண்டானால், மாப்பிள்ளை வீட்டினரின் வீட்டிலிருந்து குழந்தை பிறந்தால் அதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி பெண் வீட்டிற்கு கொடுத்தனுப்புவார்கள். இதில் குழந்தைகளுக்குத் தேவையான பால் பாட்டில், கிலுக்கு, விiயாட்டு சாமான்கள், கூடை, கொமன்ஞ்சான், குந்திரிக்கம், பால் மாவு, பிளாஸ்டிக் வட்டி, வாளி, ஜக்கு போன்ற சாமான்களுடன் இன்னபிற சாமான்களும் கொடுப்பார்கள். கொடுக்கும்முன் தங்கள் சொந்தபந்தங்களுக்கு…
Read More »