இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு செய்ய வேண்டியவை!
மாரடைப்பு பற்றி கேள்விப்படும் போது பயங்கரமாக தான் இருக்கும். மாரடைப்பு வந்துவிட்டால், அதோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை.
இரண்டு, மூன்று தடவைகள் மாரடைப்பு வந்து நிறைய காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் உண்டு. வந்ததை நினைத்துக்கொண்டு பயப்படாமல் அடுத்து எப்படி வாழ வேண்டும், அதற்கு என்ன உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்? நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சிகரெட் பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமன் உடையவர்கள், எப்போதும் டென்ஷனாக இருக்கிறவர்கள், எந்த வேலையும் செய்யாமல் உடல் இயக்கமே இல்லாதவர்கள் இவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சுவலியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடுவதில் சிரமம், தோள்பட்டை வலி. இப்படி எது இருந்தாலும் அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உடனே டாக்டரை அணுகுவது அவசியம்.
சிகிச்சை, உடற்பயிற்சி இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்காவில் எல்லா உணவு வகைகளிலும் "டிரான்ஸ்பேட்"ன்னு சொல்லப்படுகின்ற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு உள்ளது என்பதை பேக்கிங் லேபிளில் போட வேண்டும் என்ற சட்டம் இருக்கும்.
சாப்பாட்டு விடயத்தில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ். சில வகை உணவுகளை சமைக்கின்ற போதே சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறி விடும்.
அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருக்கும். உடம்பில் கொழுப்பு அதிகமாக இருக்கின்ற பொழுது, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்குகின்ற கோளாறுகளில் இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுவதற்கு இதுவும் ஒரு இன்னொரு காரணம்.
இதயம் பலவீனமானவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.
2. ஒரு முட்டையில் 210 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கின்ற காரணத்தினால் அது கூடவே கூடாது.
3. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்னில் அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ப்ரோஸன் உணவுகள் – அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
4. ஊறுகாயும் அப்பளமும் இருந்தால் போதும், வேற எதுவும் வேணாம் என்று கூறுபவர்கள் பலர். இந்த இரண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம் அதில் சேர்க்கப்படும் உப்பு.
சாப்பிடக்கூடிய உணவுகள்:
1. கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்.
2. அசைவத்தில் மீன் மட்டும்.(மீனில் இருக்கும் ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
3. ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
4. தினசரி சமைக்கும் போது சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். ரத்தத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாத்து உடல் எடையையும் குறைக்கும்.
நன்றி: சிறிலங்கா இணையதளம்
காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்
தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப…