மசாலா தூள்
காயல்பட்டணம் மசாலா தூள் மிகவும் மணமானது, சுவையானது. அனைத்து வகை சமையலுக்கும் இந்த மசாலா தூளே பயன்படுத்தப்படுகிறது. மீன், இறைச்சி, காய்கறி, பொறியல் போன்றவைகள் சமைக்கப்படும் போது காயல் மசாலா கலவையே பயன்படுத்தப்படுகிறது. மற்ற ஊர்களில் உள்ளது போல் மீனுக்கு என்று தனியாக, இறைச்சிக்கு என்று தனியாக மசாலா தூள் இல்லை. அனைத்துக்கும் ஒரே மசாலாதான். மசாலா கலவை கீழ்காணும் படி அமைக்கிறார்கள். தேவையான பொருட்கள்:
சிகப்பு வத்தல் 1 கிலோ
மல்லி 750 கிராம்
மஞ்சள் 200 கிராம்
நச்சீரகம் 100 கிராம்
பெருஞ்சீரகம் 50 கிராம்
இவற்றை எடுத்து காயவைத்து (ஈரப்பதமாக இருப்பின்) அரவை மிசினில் கொடுத்து பட்டுபோல் தூளாக அரைத்துக் கொள்வார்கள். காரம் அதிகம் வேண்டுமெனில் மல்லியை குறைத்துக் கொள்வார்கள். காரம் குறைவாக வேண்டுமெனில் மல்லியை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…