முத்து மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு.

இவர்கள் ஹிஜ்ரி 446 ல் அரபு நாட்டில் ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சத்தில் பிறந்தார்கள். தாயர் பெயர் மொகுதூம் அலி பாத்திமா. இவர்களின் தாயார் பெயரைக் கொண்டே இவர்களின் தர்ஹாவை மொகுதூம் பள்ளி தர்ஹா என்று அழைக்கிறார்கள். இவர்களின் இயற் பெயர் முஹம்மது. மகான் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையும் இவர்கள் தந்தையும் சகோதரர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கனவில் இட்ட உத்திரவிற்கு இணங்க இந்தியாவிற்கு இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் செய்ய பாண்டிய நாட்டின் துறைமுகமாகிய காயல்பட்டணம் வந்தார்கள்.
இவர்களின் மார்க்கப் பிரச்சாரத்தால் இஸ்லாத்தில் பலர் இணைந்தனர். இதனால் இவர்களின் செல்வாக்கு அதிகரித்தது. இதனால் பாண்டிய மன்னனுக்கு மிகப் பொறாமை ஏற்பட்டது. ஹிஜ்ரி 539 ல் ஏற்பட்ட மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்து காயல்பட்டணம் காட்டு மொகுதூம் பள்ளியில் அடங்கப் பட்டுள்ளார்கள். இவர்களுடன் ஷஹீதானவர்களும் இவர்கள் அருகிலேயே அடங்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அற்புதங்கள் பல செய்துள்ளனர். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளும், வஞ்சனை,சூனியம்,பேய் பிடித்தவர்களும் இத்தர்காவில் தங்கி சுகம் பெற்று செல்கின்றனர்.
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…


