நோய் நொடிகள் நீங்கிட
ஊரில் காலரா, பிளேக் போன்ற நோய், நொம்பலங்கள், துன்பங்கள் அதிகரித்து விட்டால் ஊரின் நான்கு மூலை சந்துகளில் கூடியிருந்து புனித புகாரி ஷரீஃப் கிரந்தத்தை ஓதுவார்கள். அடுத்து காவலாய் நிற்கும் வல்லோன் என்ற பைத்தையும், ஏனைய பைத்துகள், கஸீதாக்களை உருக்கமாக படித்தும், உருக்கமாக துஆ பிரார்த்தனை கேட்டும், சதக்கா (தர்மம்) கொடுத்தும் சில நாட்கள் மஜ்லிஸை நடத்துவார்கள்.
இதன்பயனாக ஊரில் பிரச்சனைகள் தீர்ந்து, நோய் நொம்பலங்கள் இல்லாமலாகிவிடும். இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மையாகும்.
1500 வது மீலாது நபி நிகழ்வுகள் காயல்பட்டினத்தில்
காயல்பட்டினத்தில் வழமையாக ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 1 முதல் 12 வரை பள்ளிவ…