Home செய்திகள் சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி
செய்திகள் - October 17, 2019

சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி

12/10/2019
சனிக்கிழமை
காயல்பட்டணம்

சின்ன ஸாஹிப் அப்பா என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற கௌதனா ஷெய்ஹனா ஷெய்கு அப்துல் காதர் தைக்கா ஸாஹிப் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 169 வது கந்தூரி தினத்தை முன்னிட்டு போர்வை போர்த்தும் நிகழ்வு நடைபெற்றது

பல்லாக்கில் பிள்ளைகளை ஏற்ற முன்பதிவு செய்த பெற்றோர்கள் பிள்ளைகளை தயார் செய்து இரவு 8 மணிக்கே சொளுகார் தெருவுக்கு கொண்டு வந்து இருந்தனர்

போர்வை ஊர்வலம் சொளுகார் தெருவில் அமைந்துள்ள நஹ்வி அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் இல்லத்திலிருந்து சனிக்கிழமை பின்னேரம் ஞாயிறு இரவு 09 மணிக்கு தொடங்கியது

சொளுகார் தெரு – கஸ்டம்ஸ் ரோடு – சித்தந் தெரு
– நெய்னார் தெரு – சதுக்கை தெரு – குத்துக்கல் தெரு – மீண்டும் சதுக்கை தெரு – குறுக்குத் தெரு – மகுதூம் தெரு – தைக்கா தெரு – காட்டு தைக்கா தெரு வழியாக புதுக்கடைத் தெரு குத்பியா மன்ஜில் வந்தடைந்தது

இரவு 11 மணி அளவில் பிள்ளைகளை புதுகடைத்தெருவில் அமைந்துள்ள பைத்துல் மஹ்மூதில் பெற்றுச் சென்றார்கள்

இரவு 11:30 மணி அளவில் குத்பியா மன்ஜிலில் இருந்து போர்வை அஹ்மதுல்லாஹ் பைத் முழக்கத்துடன் எடுத்துச் சென்று அப்பா அவர்களின் புனித ரவ்ழா ஷரீஃபில் போர்த்தப்பட்டு சிறப்பு துஆ ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுபெறது

இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்படைந்தார்கள்

Check Also

இன்று இரவு சந்திர கிரகணம்

சென்னை:  7ம் தேதி இரவு நிகழவுள்ள முழு சந்திர கிரஹணம், இரவு, 9:57 மணிக்கு துவங்கி, 85 நிமிட…