Home Uncategorized ஸாம் ஸிஹாபுத்தீன் அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு

ஸாம் ஸிஹாபுத்தீன் அப்பாவலி ரலியல்லாஹு அன்ஹு

 

     செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் தம்பியாக சுலைமான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நான்காவது மகனாக பிறந்த இவர்கள் மாபெரும் இறைநேசச் செல்வராகவும், தமிழிலும்,அரபியிலும் கவி இயற்ற வல்லவராகவும் விளங்கினார்கள்.
மார்க்கத்தில் ஊடுருவியுள்ள அனாச்சாரங்களை கண்டித்தும், மக்களுக்கு அறிவுரைகளைக் கூறியும், மார்க்க சட்டதிட்டங்களை போதித்தும் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீதும் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் புகழ்ப்பாக்கள் பாடியுள்ளனர்.

1) ரஸூல் மாலை
2) அதபு மாலை
3) நெஞ்சறிவு மாலை
4) தோகை மாலை
5) பெரிய ஹதீது மாணிக்க மாலை
6) சின்ன ஹதீது மாலை
7) நான்கு யார்கள்
8) நூயதுல் இக்திஸார் மாலை
9) உலமா மாலை
10) நபி மாலை
11) ஸூரத்துல் குர்ஆன் மாலை
12) புத்தி மாலை
13) கல்யாண பித்அத்து மாலை
14) நஸீஹத்து மாலை
15) குத்பா மாலை
16) ஹனபிமத்ஹபு மாலை
17) மஃரிபா மாலை
18) புகையிலை விலக்கு மாலை
19) அற்கான் மாலை
20) மின்ஹாஜ் மாலை
21) தன்பாக் மாலை
22) பித் அத்து விலக்கு மாலை
23) மீறான் மாலை
24) ஹதீது மாலை.

போன்ற பல்வேறு மாலைகள் இயற்றியுள்ளனர்.

 ஹஜ் சென்றிருந்த சமயம் அங்கு வந்திருந்த துருக்கி சுல்தான் முராதை சந்தித்து அரபு நாட்டில் புகை பிடிக்கும் வழக்கத்தை தடை செய்ய வேண்டிக் கொண்டார்கள். அவரும் அதை தடை செய்தார்.

இந்தியா,இலங்கை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில்  இவர்களது மாலைகள் இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன
 
ஷாம் சஹாப்தீன் அப்பா என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தவர்கள்
ரஜப் பிறை 21 இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்
 
இவர்கள் மறைந்து வாழும் பள்ளிவாசல் அப்பா பள்ளிவாசல் என்று  அழைக்கப்படுகின்றது அந்தப் பள்ளி அமைந்துள்ள தெரு அப்பா பள்ளி தெரு என்று அழைக்கப்படுகிறது
 
வருடம் தோறும் ரஜப் பிறை 21 இவர்களுடைய கந்தூரி காயல்பட்டணத்தில் நடைபெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்

நமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல…