தைக்கா லெப்பை வலி
ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இவர்கள் காயல்பட்டணம் மொஹுதூம் பள்ளியில் மறைந்து வாழும் கௌதனா ஷெய்கனா ஸாஹிபுல் கராமாத் ஷெய்கு அப்துல் காதிர் என்ற ஷெய்கனா அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் புதல்வர் ஆவார்கள்,
தந்தையின் அப்துல் காதிர் என்ற பெயரே மகனுக்கு சூட்டப்பட்டது ஏனென்றால் பிள்ளை பிறப்பதற்கு முன்னால் அதன் தந்தை மறைந்து விட்டாள் தந்தையின் பெயரை பிள்ளைக்கு சூட்டப்படும் வழமை சஹாபாக்கள் காலந்தொட்டே உள்ளது
கீழக்கரை தைக்கா ஸாஹிபு அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் தாயார் ஸெய்யிதா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் தம்பியுமாகும்.
ஷேக் அப்துல் காதிர் தைக்கா ஸாஹிப் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களின் தாய் மாமனாரான இவர்கள் தைக்கா லெப்பை ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ என்று அழைக்கப்பட்டார்கள்
இவர்களும் கௌதனா ஷெய்கனா உமருல் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹு நாயகமும், காமில் முகம்மிலாம் ஸெய்யிது முஹம்மது புஹாரி தங்கள் ரலியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தின் கலீஃபாவாகும்.
ஆலிமுல் அரூஸ் என்று அழைக்கப்படக்கூடிய இமாம் செய்யிது முஹம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தந்தையாகிய வெள்ளை அஹமது வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தைக்கா லெப்பை ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களுடைய மாணவர் ஆகும்.
காயல்பட்டணத்தில் எண்ணற்ற மாணவர்களுக்கு கல்வி ஞானத்தை வழங்கி இறைவழிபாட்டை நடத்திய இடம் காட்டு தைக்கா என்று அழைக்கப்பட்டது அங்கேயே இவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் இவர்கள் மறைந்த தினம் ஜமாதுல் ஆகிர் பிறை 8
இவர்களை ஜியாரத் செய்ய வருபவர்கள் தொழுவதற்கு அருகில் பள்ளிவாசல் கட்டப்பட்டது
ஆலிமுல் ஆரூஸ் அவர்களின் பெயரைத் தாங்கி ஆரூஸியா பள்ளி என்று அழைக்கப்படுகின்றது
இவர்களுடைய தைக்கா அமைந்திருக்கும் பகுதிகுதி காட்டு தைக்கா தெரு என்று அழைக்கப்படுகின்றது
Thaika Lebbai Wali: ( 1240 A.H).
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…