வரலாறு
செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8. அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.
Read More »பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தகப்பனார் பெயர் செய்கு ஸலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் கல்விக் கடலாகவும், மறைவான கல்வியில் மேம்கட்டும் திகழ்ந்தார்கள். இவர்களுக்கு பெண் வாரிசுகள்தான் உண்டு. காதிரிய்யா கொடிமா சிறுநெய்னார் பள்ளியில் மேற்குப் பகுதியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் அப்துற் றஹ்மான் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களின் மகளை மணந்த மருமகனாவார்கள். இவர்களிடம் கற்ற பலர் மார்க்க அறிஞர்களாகவும், மாபெரும் வலியாகவும் திகழ்ந்துள்ளார்கள். இவர்களின் சீடர்களில்…
Read More »நுஸ்கி வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் இயற்பெயர் செய்கு அலி நெய்னார்.இவர்களது தந்தை பெயர் அஹ்மது. மிகவும் அல்லாஹ்விற்கு அஞ்சி வழிபட்டதனால் இவர்களுக்கு வணக்கவாளர் என்று பொருள்படும் நுஸ்கி என்ற சிறப்புப் பெயரில் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 995 – கி.பி.1587. அடக்கவிடம் மொகுதூம் பள்ளி.
Read More »சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு
சாலார் மரைக்கார் வலி ரலியல்லாஹு அன்ஹு. இரட்டைக்குளத்துப் பள்ளியின் கிழக்கு வாயிலின் அருகே அடங்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் மறைவு ஹஜ்ரி 848.
Read More »ஹஜ்ரத் அபுபக்கர் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்கள் கீழநெய்னார் தெருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கற்புடையார் வட்டத்தில் அமைந்திருக்கும் கற்புடையார் பள்ளியில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் கபுறு ஷரீஃபை விட்டு எழுந்து செல்லும் சக்தி பெற்றவர்களாக தகழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 847. ஓவ்வொரு ஆண்டும் கந்தூரி சிறப்பாக நடைபெறுகிறது.
Read More »செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு.
செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு இவர்களின் சகோதரர்கள் ஜஃபர் சாதிக் வலி, செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்களாவார்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து உலாவும் தஸர்ருபாத் எனும் ஆற்றலுடையவர்கள். இவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைவிற்குப் பின்னும் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். கட்டபொம்மன் காயல்பட்டண மக்களிடம் கப்பம் கேட்டு படையை அனுப்பினான் படை வந்து நகரின் அருகில் தங்கினான். செய்கு சலாஹுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படைகள் முன்…
Read More »ஈக்கி அப்பா என்ற பள்லுல்லாஹ் வலி ரலியல்லாஹு அன்ஹு.
ஈக்கி இவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்து தங்கினார்கள். ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களை பாண்டிய நாட்டின் தளபதியாக நியமித்தார்கள். இவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். சோழ மன்னனின் கடற்படை பாண்டிய நாட்டை தாக்கிய போது கடற்படை கரை சேராவண்ணம் காத்து நின்றார்கள். பலம் வாய்ந்த இவர்களின் படை சோழப்…
Read More »முத்து மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்கள் ஹிஜ்ரி 446 ல் அரபு நாட்டில் ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வம்சத்தில் பிறந்தார்கள். தாயர் பெயர் மொகுதூம் அலி பாத்திமா. இவர்களின் தாயார் பெயரைக் கொண்டே இவர்களின் தர்ஹாவை மொகுதூம் பள்ளி தர்ஹா என்று அழைக்கிறார்கள். இவர்களின் இயற் பெயர் முஹம்மது. மகான் ஏர்வாடி ஷஹீது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையும் இவர்கள் தந்தையும் சகோதரர்கள். ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கனவில்…
Read More »அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு
அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறந்த வருடம் ஹிஜ்ரி 1000. இவர்களின் தந்தை சதக்கு நெய்னார் வலி ரலியல்லாஹு அன்ஹு நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத்து பெற்றவர்கள். காயல்பட்டணத்தில் மறைபோதித்த மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கல்வி கற்றார்கள். குத்பா பெரியபள்ளியில் வைத்து பகுதாது ஷெய்கு அஹ்மது ஜலாலுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்…
Read More »ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
ஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு காலம் : ஹிஜ்ரி 980 – 1077 (கி.பி. 1573 – 1667) இயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா. ஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு… ஒரு நாள் இரவு…
Read More »