பள்ளிவாசல்
முஹ்யித்தீன் ஜீம்ஆ பள்ளிவாசல் திருச்செந்தூர்
திருச்செந்தூரில் நமதூர் மக்களின் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »சாகுல் ஹமீதிய்யா பள்ளிவாசல்
ஸ்டேசன் பள்ளி என்றழைக்கப் படும் இப் பள்ளி ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. 23-02-1923 காயல்பட்டணம் ரயில்வே ஸ்டேசன் திறக்கப்படட்டதும் காயல் நகர மக்கள் வசதிக்காக மரைக்கார் பள்ளித் தெருவைச் சார்ந்த பி.இ. சாகுல் ஹமீது ஹாஜி அவர்களால் 20-03-1936 ல் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »மஸ்ஜித்துன் நூர் பள்ளி
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிச வழியில் வந்துதித்த மொகுதூம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷஹீதாகி அடங்கப்பட்டுள்ள தர்கா காம்பவுண்டிற்குள் ஹாஜி S.N. சுல்தான் அப்துல் காதர் அவர்களால் இப் பள்ளி கட்டப்பட்டது.
Read More »ஆறுமுகநேரி பக்கீர் தைக்கா பள்ளிவாசல்
காயல்பட்டணம் மஹ்லறாவிற்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஆறுமுகநேரியின் முக்கிய சந்திப்பான மெயின் பஜார் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ளது. இதையொட்டியே இதற்கு பள்ளிவாசல் பஜார் என்று அழைக்கப்படுகிறது. இதன் உள் பகுதியில் மகான் ஒருவரின் கப்ரு ஷரீஃப் உள்ளது.
Read More »ஹலிமா பள்ளி
சதுக்கைத் தெருவில் பெரிய சதுக்கைக்கு வடபுறம் உள்ளது. பெண்கள் பள்ளியாக வக்பு செய்யப்பட் பள்ளியாகும். பிரதி வாரம் வெள்ளி மாலை மஜ்மூஉ ஸலவாத்து என்னும் ஸலவாத்து மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 14 அன்று காதிரிய்யா திக்ரு-ராத்திபு மஜ்லிஸ். பிதி மாதம் பிறை 27 அன்று ஸலவாத்து நாரிய்யா மஜ்லிஸ். நோன்பு மாதம் முழுவதும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை பத்து ஸலாம் நடத்துதல். பிறை 12,27 அன்று…
Read More »முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளி – கடற்கரை பள்ளி
காயல்பட்டணம் கடற்கரை சிங்கித்துறையில் வாழும் முஸ்லிம்களுக்காக அங்கு வாழும் முஸ்லிம்களால் சுமார் 1992 ம் வருடவாக்கில் மௌலானா மௌலவி அஷஷய்கு S.M.H.முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1995 ம் வருடம் பள்ளி திறக்கப்பட்டது. இங்கு ரபியுல் அவ்வல் மாதம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு மீலாது விழா எடுக்கப்படுகிறது. …
Read More »ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி
1955ம் ஆண்டு ஜும்ஆ பத்வா வெளிவந்தது.நகரின் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸி கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில் இப் பள்ளி அமைந்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களில் தாய்மொழியில் குத்பா பிரசங்கம் செய்யப்படாததல் இருந்த காலகட்டத்தில், முதன்முதலாக இந்தப்பள்ளி நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்தே மிம்பரில் நின்று தமிழிலேயே குத்பா பிரசங்கம் செய்யப்பட்டு வருகிறது. ஹிஜ்ரி 1378 ரபியுல் அவ்வல் பிறை 12 (26-09-1958) வெள்ளிக்கிழமை மௌலவி மு.க. செய்யிது இபுறாகிம் ஆலிம் அவர்கள்…
Read More »K.M.T.பள்ளிவாசல்
கே.எம்.டி. மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் தொழுவதற்கு வசதியாக மருத்துவமனை வளாகத்தில் இப் பள்ளி கட்டப்பட்டுள்ளது.
Read More »ஹஜ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி
காயல்பட்டணம் நெய்னார் தெருவில் கிழக்குப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியாகும். இப் பள்ளியின் முகப்பில் பெண் வலியுல்லாஹ் ஒருவரது கபுறு ஷரீஃபு உள்ளது. அக் காலத்திய காழி ஒருவரின் மகளுடைய கபுறு ஷரீஃப் என்று சொல்லப்படுகிறது. ஹிஜ்ரி 1430 , மார்ச் 1, 2009 ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டது. திறப்பு விழா அழைப்பிதழ்! நாள்: ஹிஜ்ரி 1430 ரபீயுல் அவ்வல் பிறை 3…
Read More »மஸ்ஜிதுர் ரஹ்மான்
2006ம் வருடம் கட்டப்பட்ட பள்ளி இது. புதிதாக விரிவாக்கப்பட்ட ஊர் பகுதியான ஹாஜி அக்பர்சா நகரில் இப் பள்ளி உள்ளது.
Read More »