ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
ஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு
காலம் :
ஹிஜ்ரி 980 – 1077
(கி.பி. 1573 – 1667)
இயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு,
ஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு,
அடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா.
ஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு…
ஒரு நாள் இரவு பெரிய சம்சுதீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களிடம் பாடம் முடிந்தது வீட்டுக்குச் செல்லும் பொழுது ஆசிரியர் அவர்கள் இவர்களைப் பார்த்து நான் வீட்டிற்குச் சென்று திரும்பி வரும் வரை இங்கே இருக்கவும் என்றார்கள்
நேரம் சென்று கொண்டே இருந்தது ஆசிரியர்கள் வரவில்லை சுப்ஹு உடைய நேரத்தில் ஆசிரியர் வருகிறார்கள் மாணவரை அங்கே நிற்பதைப் பற்றி காரணம் கேட்ட பொழுது மிகவும் பணிவுடன் நீங்கள் திரும்பி வரும் வரை என்னை எங்கே இருக்கச் சொன்னீர்கள் அதனால் நான் இங்கே நின்று கொண்டிருந்தேன் என்றதும்
கட்டியணைத்து இறைவனிடம் ஞானத்தை கொடுக்க இறைஞ்சினார்
ஒழுக்கத்திலும் வாக்குறுதியை பேணுவதிலும் தலைமையக இருக்கும் அந்த மாணவரை ஹாஃபிழ் அமீர் என்று புகழ்ந்துரைத்தார்கள்
அன்றிலிருந்து அனைவராலும் ஹாஃபிழ் அமீர் என்று அழைக்கப்பட்டார்கள்
நாகூர் நாயகத்தின் முன்னறிவிப்பு…
ஒருமுறை நாகூர் ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹும் காயல்பட்டினத்தில் வருகை தந்த பொழுது இந்தப் பகுதியில் வாழ்ந்த பெரியவர்கள் நாகூர் நாயகத்தின் இங்கேயே தங்கி விடும்படி வேண்டினார்கள்
நாகூர் நாயகம் அவர்கள் என்னுடைய பெயர் ஷாகுல் ஹமீது என்ற பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து இங்கேயே மறைவார் என்ற சுபச் செய்தியை பதிலாக கூறிச் சென்றார்கள் அதன்படியே நடந்தது
ஹாபிழ் அமீர் அப்பாவின் அடக்க ஸ்தலத்திற்கு அருகில் அமைந்த பள்ளிவாசல் இவர்களது பெயரிலேயே ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி என்று அழைக்கப்படுகின்றது.
அரபுத்தமிழ் எழுதும் முறையை அறிமுகப் படுத்தியவர்கள் .
மாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் நினைவாற்றலை பெறுவதற்கு இவர்களிடம் ஜியாரத் செய்வது வழக்கமாக உள்ளது.
கந்தூரி நிகழ்வுகள் …
துல்கஃதா பிறை 1 அன்று கொடி ஏற்றப்பட்டு தினமும் அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு கத்முல் குர்ஆன் ஓதப்படுகின்றது
பிறை 13 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மவ்லித் மஜ்லிஸ் உரூஸ் கந்தூரி தினமான பிறை 14 இரவு மகரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு திக்ர் மஜ்லிஸ்
இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க உபன்யாசமும் விமர்சையாக நடைபெற்று வருகின்றது
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…