Home வரலாறு வலிமார்கள் காழி அலாவுத்தீன் வலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு
வலிமார்கள் - September 14, 2008

காழி அலாவுத்தீன் வலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு

    காழி அலாவுத்தீன் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு    (மறைவு ஹிஜ்ரி: 973, கி.பி. 1565)

இவர்களின் முழுப்பெயர் செய்யிது முஹம்மது காழி அலாவுத்தீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

இவர்களின் தகப்பனார் பெயர் செய்யிது அலாவுதீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு,இவர்களின் மறைவு ஹிஜ்ரி 937, செய்யிது அலாவுத்தின் வலி அவர்களின் தந்தையார் பெயர் முஹம்மது செய்து மஹ்தூம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களின் சந்ததியினர்கள்.

ஹுசைன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 27-வது தலைமுறைப் பேரர்.

நம்முடைய காழி அலாவுத்தீன் அப்பா அவர்கள் குத்பாக விளங்குகிறார்கள்.

இவர்களும் இவர்களுடைய தகப்பனார் அவர்களும் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அஹ்மது நெய்னார் பள்ளியை ஒட்டிய தைக்காவில் அடங்கியுள்ளார்கள் அது காழி அலாவுத்தீன் அப்பா தைக்கா என்று அழைக்கப்படுகிறது

ஆலிப்புலவர் காயல்பட்டினம் முஹம்மதப்பா மரபினரிடையே பெற்ற மிஃராஜ் கிதாபினை அன்றே காழி செய்யித் முஹம்மது அலாவுத்தீன் அப்பா அவர்கள் தமிழில் விளக்கம் செய்ய, இனிய தமிழ் காவியமாக்கினார்கள், ஆலிப்புலவர் அவர்கள். அப்பா அவர்களைப் பற்றியும், காயல்பட்டினத்தைப் பற்றியும் தம் நூலில் குறிப்பிடும் சில அடிகள்

“களித்த சிறை வண்டுலவக் கமலம் விள்ளுங் காஹிரியிரில் வாழ் செய்கு முகம்மதின்பா

லளித்தவவு லாதிறசூ லறிஞர் பீரா மடல்மகுதூம் காழியலாவுத்தீன் பாற்

(மிஃராஜ் மாலை – 17)

மருவளர் காஹிரி னாடுறு செய்குமு
கம்மத லாவுதினோ

ரருள்வளர் நந்நபி தம்மிகுறாஜை யருந்தமிழ் செய்திடலால்

(மிஃராஜ் மாலை – 20)

ஆலிப்புலவர் அவர்கள் அவ்லாதிரசூல் காழி அலாவுத்தீன் அப்பாவைப் பற்றி குறிப்பிடும் போது

வேதம் ஓதிய கிராஅத் ஏழுடன் மிக்கதான தஃப்ஸீருக்கும் நாத மேவிய சொல் நஹ்வு ஸர்ஃபுடன் நல்ல இல்மு பதினாலுக்கும், சீதமேவிய சொல் இலக்கணம் செப்பிடும் பதினெண் பாடைக்கும் போதவல்ல மகுதூம் அலாவுத்தீனைப் போற்ற நல்லறிவு பொங்குமே
என்றது புலமை எடுத்துக்காட்டாகும்.

காழி அலாவுத்தீன் வலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு, அவர்கள் மாட்சியமை வாய்ந்த ஆலிமாகவும், நேர்மை வாய்ந்த நீதிமானாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் காழியாக இருக்கும் போது காயல்பட்டினத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்கள். குறிப்பாக ஒரு நாள் அப்பா அவர்கள் கடற்கரையோரமாக நடக்கும் போது ஒரு நிறைசூலியான பெண்மணி கடலோரமாக ஊற்றுத் தோண்டி சிரமப்பட்டு தண்ணீர் எடுப்பதைப் பார்த்து ஏன் பிரசவ வேதனை ஏற்படக்கூடிய நேரத்தில் தண்ணீர் எடுக்க வந்தாய் என்று கேட்டபோது, ‘என் மாமியார் வற்புறுத்தினார், வேறு வழியின்றி வருத்தத்துடன் வந்தேன் என்று கூறினாள்.

அம்மாமியாரின் கொடுமை இவர்களின் மனதை பெருந் துன்பத்தில் ஆழ்த்தியது. அன்று முதல் ஊர் கூட்டத்தைக் கூட்டி மணமகன்தான் மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழ வேண்டுமென்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதன்படி பல பிரச்சனைகள் இல்லாமல் போனது அன்றிலிருந்து காயல்பட்டினத்திலும், காயல்பட்டினம் மக்கள் குடியேறிய ஊர்களிலும் இவ்வழக்கம் பழக்கத்திற்கு வந்துள்ளது

பல ஊர்களிலும் இந்த தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்தி வருகின்றனர்

காழி அலாவுத்தீன் அப்பா அவர்கள் ஹிஜ்ரி 973 ல் மறைந்தார்கள். இவர்கள் அடங்கியிருக்கும் காழி அலாவுத்தின் அப்பா தைக்காவில் மற்றும் பல நாதாக்களும் அடங்கி இருக்கிறார்கள். அப்துர்ரஷீத் இப்னு அப்துல் ஜையிப் இப்னு அலாவுத்தீன்ரழியல்லாஹு தஆலா அன்ஹு, இப்பெரியாரும் காயல்பட்டினம் கொடிமர சிறுநெய்னார் பள்ளியை அமைத்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் மறைந்தது ஹிஜ்ரி 971

இவர்களுக்கு அடுத்து அடங்கியிருப்பவர் செய்யிது முஹம்மது வலி இப்னு அலாவுத்தீன் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இவர்கள் மறைந்தது ஹிஜ்ரி 924 இவர்களுக்கு பக்கத்தில் காழி அலாவுத்தீன் அப்பா அவர்களும், அவர்களின் தகப்பனார் அவர்களும், அவர்களின் சகோதரி அவர்களும் அடங்கியிருக்கிறார்கள்.

காழி அலாவுத்தீன் அப்பா அவர்களின் மக்களும், பேரர் களும் காழியாக பதவி வகித்துள்ளார்கள். இவர்களின் பரம்பரையினர்கள் மதுரையிலும் செல்வாக்குடன் இன்றும் வாழ்கிறார்கள் அந்த பகுதி காஜிமார் தெரு என்று அழைக்கப்படுகிறது இவர்களின் குடும்பத்தினர் சிலர் கோழிக்கோட்டில் குடியேறி உள்ளார்கள

Sayyid Muhammad Wali: ( 924 A.H)

             Sayyid Muhammad Wali was the son of Alauddin Wali. He was a descendant of our noble Prophet Muhammad (sallalahu alaihi wa sallam). The year of his demise was 924 A.H. His tomb is at Kali AlauddinThaika.

 Sayyid Alauddin Wali: ( 937 A.H)

             Sayyid Alauddin Wali was a son of Muhammad Wali. He was one of the descendants of our nobleProphat Muhammad (sallalahu alaihi wa sallam). He died on 937 A.H. and was buried at Kali AlauddinThaika.

 Mariyam Waliyullah: ( 950 A.H) 

              Mariyam Waliyullah was a daughter of Sayyid Alauddin Waliyullah. She was a descendant of our Prophet Muhammad (sallalahu alaihi wa sallam). Her tomb is at Kali Alauddin Wali Thaika. All the five Saints buried at Kali Alauddin Thaika  were all relatives and descendants of our Noble Prophet Muhammad (sallalahu alaihi wa sallam).

Abdur Rasheed Wali: ( 971 A.H) 

                                     Abdur Rasheed Wali was a son of Abdul Kaiyoom and a grand son of AlauddinWali.They all descendants of our beloved Prophet Muhammad (sallalahu alaihi wa sallam). He built KodimaraSiru Nainar Palli between 930 A.H and 940 A.H and his brother Ahamed Nainar built Ahamed Nainar Mosque in 920 A.H. Periya Shamsuddeen Wali married Abdur Rasheed Waliyullah’s daughter.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…