சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ
அறிந்து அமல் செய்வோம்
நமது பகுதியில் நடைமுறையில் உள்ள நல்ல செயல்களை ஒவ்வொன்றாக
ஆராய்ந்து தகவல் திரட்டி இந்த தளத்தில் பகிர்ந்து வருகிறோம் அந்த அடிப்படையில் இன்று நமது பகுதியில் பிரபல்யமான இந்த கவிதை யாரால் சொல்லப்பட்டது என்பது பற்றிய தகவல் தொகுப்பு….
சொல்லுஞ் செயலும் ஒன்றாக்குநீ சோர்வுறா தெங்களை ஆக்குநீ வல்லவா அல்லலை போக்குநீ அல்லாஹ் அடியாரை காக்குநீ
ஆலநபி அவர் பொருட்டினால் ஆல்அசு ஹாபுகள் பொருட்டினால் அன்பியா அவ்லியா பொருட்டினால் அண்ணல மான்றோர்கள் பொருட்டினால்,
திங்கள் வெள்ளி ராத்திபோதிடும் எங்கள் அமல்களை ஏற்றுக்கொள்வாய் மங்கள மாகும் தைக்காவதனில் தங்கள் புகாரி ஜிப்ரீசார்பால்
காயல்நகர் மக்கள் எல்லவர்க்கும் காதிரியா வழி செல்பவர்க்கும் காலவிரோ தங்கள் காணாமல் காத்தருள்வா யெங்கள் ஆண்டவா –
வையம்புகழ் வகுதை பதியாம் துய்யமுஹி யத்தீன் சீடர்களாம் மெய்யாயவர் பொருட் டெங்களையே ஐயமறச் செய்வாய் ஆண்டவா
தைக்கா ராத்திபு நிறைவுற்ற பிறகு இறுதியில் ஓத இணைக்கப்பட்ட இந்தக் கவிதை
*செய்யிது அஹ்மது மௌலானா* அவர்களால் கோர்வை செய்யப்பட்டது
இந்த கவிதையை யார் கோர்வை செய்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்கும் நல்ல நோக்கத்தில் புதிதாக இரண்டு வரிகள் *மஹ்மூது ஹுஸைன் மௌலானா* அவர்களிடம் ஏற்றி தர கேட்டதன் அடிப்படையில் அவர்கள் சொன்ன கவி வரிகள் …
*தாஜ்ஜுல் வலி உயர் மரபினராம் செய்யிது அஹ்மது மௌலானா தே சுர யார்த்த நற்கவியிதனால் தகுபயன் தருவாய் நாயனே*
தற்போது ராத்திபில் இணைத்து ஓதப்படும் இந்த இரண்டு வரிகள் மஹ்மூது சுலைமான் ஆலிம் அவர்களால் அச்சிடப்பட்ட ராத்திபு கிதாபில் இல்லாத காரணத்தால் தனி ஒரு தாளில் அச்சிடு ஒட்டப்பட்டு ஓதப்பட்டு வருகிறது .
அல்ஹம்துலில்லாஹ்
*அடுத்த தகவலில் மற்றுமொரு நடைமுறை பற்றிய விபரம் தொடரும்…*
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…