அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு
நொடிப் பொழுதில் உலகை சுற்றிவரக் கூடிய ஆற்றல் படைத்தவர்களாக இருந்தார்கள். பல்வேறு கராமாத்துகளை நிகழ்த்தியுள்ளார்கள்.
மாபெரும் மார்க்க விற்பன்னராகவும், சன்மார்க்கத்தின் சகல கலைகளின் தேர்ச்சி பெற்றவர்களாகவும், இலங்கிய அவர்களின் மகிமை வங்காளம் சீனம் பர்மா மற்றும் அரபு நாடுகளிலெல்லாம் கீர்த்தி பெற்று விளங்கியது. இதை அவர்களின் ஐந்து மாணிக்கங்களில் ஒருவரான ஷாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ரசூல் மாலையிலே 101வது அடியிலே சொல்கிறார்கள்.
அக்காலத்தில் அவர்களை சந்திக்க வரும் முரீதீன்கள், அவர்களை ஹஜ்ஜில் பார்த்ததாகவும், இன்னும் சிலர் வேறு இடங்களில் உதவிக்கழைத்தபோது பார்த்ததாகவும், இப்படி சொல்வதும் அதை மக்கள் கேட்டு ஆச்சர்யமாகிப்போவதும் வழமை. இருப்பினும் உலமாக்களில் சிலர் இது ஒரு வேளை ஜின்னியத் – ஜின் வாஸிலாத்தாக இருக்குமோ என்றே ஐயப்பட்டு அமைதியாக இருந்தனர். ஏனெனில் இப்படி கராமாத்துக்களை போல் ஜின்களை வாஸிலாத் செய்தவர்களும் செய்வார்கள் என்றே அறிந்திருந்தனர்.
கௌதனா அவர்கள் ஷரீஅத்திலும் மார்க்க பேனுதலிலும் சம்பூர்ணமாக இருக்கிறார்களே என்று நல்லெண்ணம் வைத்த உலமாக்களில் பிரசித்தி பெற்ற ஒருவர், ஒருநாள் கனவு பார்க்கிறார்கள். அதில் கௌதனா அவர்கள் ஒழு செய்வதற்காக தமது மேல் அங்கியை நீக்கிவிட்டு அமர்கிறார்கள். அப்பொழுது அவர்களது முபாரக்கான தோளின் மீது கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டகை ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கால் பாதத்தின் அடையாளம் இருப்பதை மிக தெளிவாக கான்கிறார்கள். பின்னர் தாம், அவர்கள் மிக உறுதியுடன் கௌதனா அவர்கள் சந்தேகமின்றி அல்லாஹ்வின் நேசர் என்று திடமான நம்பிக்கை கொள்கின்றனர்.
இதைத்தான், இமாம் ஷாம் ஷிஹாபுத்தீன் அப்பா அவர்கள், தமது மீரான் மாலை 118வது அடியில்
ஷெய்கு சுலைமான் தோளிற் சொப்பணத்திற் சிலஉலமா
ஜாஹுடையோர் தாளிருக்கச் ஷக்கறவே கண்டனர்காண்
என்று சொல்கிறார்கள்.
இவர்கள் மறைவு ஹிஜ்ரி 1079 ரபியுல் அவ்வல் பிறை 19 செவ்வாய் கிழமை காலை 79 வது வயது.
அடக்கஸ்தலம் மரைக்கார் பள்ளி.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…