தலங்கள்
மரைக்கார் பள்ளி
மரைக்கார் பள்ளி தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. நகரின் பழம் பெரும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. ஐந்து ரத்தினங்களை பெற்றெடுத்த மகான் ஹஜ்ரத் சுலைமான் வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீப் இங்குள்ளது. இவர்களின் பெயரால் வருடந்தோறும் கந்தூரி விழா எடுக்கப்பட்டு வந்தது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இப் பள்ளி புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.
Read More »கடைப்பள்ளி
காயல்பட்டணம் பரிமார் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. புனித மக்காவிலுள்ள கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்டிருக்கும் மூலைக்கு நேரே வடமேற்கு திசையில் 280 டிகிரியில் காயல்பட்டணம் அமைந்துள்ளது. அதிலும் இப்பள்ளி மிஃராபே கஃபாவிற்கு மிகச்சரியாக இருக்கிறது எனக் கூறி தங்களின் எல்லாத் தொழுகைகளையும் இப் பள்ளியிலேயே தொழுது வந்துள்ளனர் ஹஜ்ரத் சின்ன முத்துவாப்பா ஒலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இப் பள்ளிக்கு மையவாடி உள்ளது.
Read More »ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி
காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான மகான் ஹாபிழ் அமீர் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் இப் பள்ளி பெரிய நெசவு தெருவின் தென் கோடியில் அமைந்துள்ளது. இம் மகான் இங்கேயே அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதி வருடம் துல் கஃதா மாதம் பிறை 14 அன்று சிறப்பாக கந்தூரி கொண்டாடப்படுகிறது. …
Read More »செய்கு சலாஹுதீன் பள்ளி (மேலப்பள்ளி)
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக்…
Read More »செய்குஹுஸைன் பள்ளி
ஹஜ்ரத் செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ள பகுதியையொட்டி இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தையொட்டி இப்பள்ளி அமைந்துள்ளது. மலையாள மகாராஜா மகள் சுகமில்லாமல் பலராலும் வைத்தியம் செய்ய இயலாத நிலையில் இப்பள்ளியில் இருந்த வைத்தியர் வைத்தியம் செய்து குணப்படுத்தியதால் அந்த மகராஜரால் இப்பள்ளி கட்டப்பட்டது.இவர்கள் பெயர் செய்யிது முஹம்மது வலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரிய வைத்தியரப்பா. குடிமக்கள்…
Read More »மொகுதூம் பள்ளி
சுமார் 1200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி. ஹஜ்ரத் காழி அலாவுத்தீன் வலி அவர்களின்பாட்டனார் அவர்கள் இப் பள்ளியைக் கட்டியதாக தெரிகிறது. இப் பள்ளி மையவாடியில் 12000 க்கும் மேலான இறைநேசர்கள் அடங்கியுள்ளனர் என்று தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறியுள்ளனர். இப் பள்ளியில் காழியார் முஹல்லா நிகாஹ் தஃப்தர் உள்ளது. 1. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா…
Read More »மஹ்லறா
கவின்மிகு மஹ்லறா! சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு! முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லாஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.…
Read More »மஹ்ழரத்துல் காதிரிய்யா
கவின்மிகு மஹ்லறா! சுமார் 100 அடி உயரம்! 100 அடி அகலம்! நான்கு கன அடிகளைக் கொண்ட வலிமை மிக்க சுவர்! தூண்களே இல்லாத வட்டவடிவமான கும்பம்! நிமிர்ந்து பார்த்திடத் தூண்டும் நெடிதுயர்ந்த மினாராக்கள்! பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று உணர்ச்சியூட்டும் அமைப்பு! முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனிதமிகு ரவ்லாஷரீஃபின் அமைப்பில் பரவசமூட்டும் பாங்கான கவர்ச்சி! காதிரிய்யா தரீகாவின் கவினார்ந்த சின்னமாக நின்றிலங்கும் மஹ்லறா.…
Read More »தாயிம் பள்ளி
மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான இது தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையான கருத்ததம்ப மரைக்காயர் தெருவில் தெற்கில் அமைந்துள்ளது. காதிரிய்யா தரீகாவின் திக்ரு மஜ்லிஸ் நடைபெறும் ழியாவுல் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் தைக்காவும் வள்ளல் சீதக்காதி வாசக சாலையும் இப் பள்ளிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. வரகவி காஸிம் புலவர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் திருப் பேரர் முஹம்மது யூசுப் லெப்பை ஆலிம் மற்றும் கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது…
Read More »காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு
காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம் அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ்…
Read More »