Home வரலாறு ஸாம் ஸிஹாபுத்தீன் அப்பா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

ஸாம் ஸிஹாபுத்தீன் அப்பா வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு

 

    

செய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஜந்து ரத்தின பிள்ளைகளில் நான்காவது மகனாக பிறந்தவர்கள் சாம் ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு தமிழிலும், அரபியிலும் கவி இயற்ற வல்லவராக விளங்கினார்கள் மாபெரும் இறைநேசச் செல்வர்

சமுதாயத்தில் ஊடுருவியிருந்த அனாச்சாரங்களை சீர்திருத்தியும், மக்களுக்கு அறிவுரைகளைக் கூறியும், மார்க்க சட்டதிட்டங்களை போதித்தும் ஆயிரத்திற்கும் அதிகமான பாமாலைகள் இயற்றியுள்ளனர். இவற்றில் பல பாடல்கள் இன்றளவும் மக்கள் இதயத்தில் மனப்பாடமாக உள்ளன. மாணவர்களின் பாடத்திட்டத்திலும் உள்ளது.


ஹதீஸ் மாலை

பெரிய ஹதீஸ் மாணிக்க மாலை சின்ன ஹதீஸ் மாணிக்க மாலை இதன் மூலமாக பல ஹதீஸ்களின் தமிழ் பொருளை எளிய கவி வடிவில் தந்துள்ளார்கள்

அந்த ஹதீஸ் யார் மூலமாக அறிவிக்கப்பட்டது என்ற விபரமும் கூறப்பட்டுள்ளது

ரசூல் மாலை

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பு சிறப்பு அதிசயங்கள் புகழ் குடும்பம் தோழர்கள் பற்றிய வரலாறை தமிழ் கவி வடிவில் சொல்லப்பட்டதே ரசூல் மாலை

மீறான் மாலை

முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் பிறப்பு சிறப்பு அதிசயங்கள் புகழ் பற்றிய வரலாறை தமிழ் கவி வடிவில் மீறான் மாலையில் கூறப்படுகிறது

சலாத்துல் அற்கான் மாலை

தொழுகை, ஒழுவுக்கு உரிய சட்ட திட்டங்கள் முறையும் விபரங்கள் தொழுகையைவிட்டால் ஏற்படும் தண்டனைகள் போன்றவற்றை கவி வடிவில் தந்துள்ளதால் எளிதாக மாணவர்கள் மனனம் செய்து படிக்கின்றார்கள்

அவர்கள் எழுதிய மாலைகளில் சில

1) ரஸூல் மாலை
2) அதபு மாலை
3) நெஞ்சறிவு மாலை
4) தோகை மாலை
5) பெரிய ஹதீது மாணிக்க மாலை
6) சின்ன ஹதீது மாலை
7) நான்கு யார்கள்
8) நூயதுல் இக்திஸார் மாலை
9) உலமா மாலை
10) நபி மாலை
11) ஸூரத்துல் குர்ஆன் மாலை
12) புத்தி மாலை
13) கல்யாண பித்அத்து மாலை
14) நஸீஹத்து மாலை
15) குத்பா மாலை
16) ஹனபிமத்ஹபு மாலை
17) மஃரிபா மாலை
18) புகையிலை விலக்கு மாலை
19) அற்கான் மாலை
20) மின்ஹாஜ் மாலை
21) தன்பாக் மாலை
22) பித் அத்து விலக்கு மாலை
23) மீறான் மாலை
24) ஹதீது மாலை.

போன்ற பல்வேறு மாலைகள் இயற்றியுள்ளனர்.
ஹஜ் சென்றிருந்த சமயம் அங்கு வந்திருந்த துருக்கி சுல்தான் முராதை சந்தித்து அரபு நாட்டில் புகை பிடிக்கும் வழக்கத்தை தடை செய்ய வேண்டிக் கொண்டார்கள். அவரும் அதை தடை செய்தார்.

இந்தியா,இலங்கை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இவர்களது மாலைகள் இன்றளவும் பயிற்றுவிக்கப்படுகின்றன

ஷாம் சிஹாப்தீன் அப்பா என்று மக்களால் அழைக்கப்பட்டும் இவர்கள்
ரஜப் பிறை 21 இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்

இவர்கள் மறைந்து வாழும் தர்கா அருகில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் அப்பா பள்ளிவாசல் என்றும் அந்தப் பள்ளி அமைந்துள்ள தெரு அப்பா பள்ளி தெரு என்று அழைக்கப்படுகிறது

வருடம் தோறும் ரஜப் பிறை 21 இவர்களுடைய நினைவு நாள் கந்தூரி எங்கும் பரவலாக நடத்தப்படுகிறது .

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…